522
கலைஞர் மு. கருணாநிதி
522 “ஜூலியஸ் சீசர் ஆலயம்தான் அது. கலைஞர் மு. கருணாநிதி "அப்படியானால் அந்த மாவீர ரைத் தெய்வமாகவே வழிபடுகிறீர்கள் என்று சொல்லுங்கள்!" "எங்களுடைய நன்றியுணர்வின் அறிகுறியாகத்தான் அவருக்கு இவ்வாறு ஆலயம் எழுப்பி வழிபடுகிறோமே அல்லாமல் வேறு எதனையும் எதிர்பார்த்து அல்ல; வீழ்ச்சியுற்றுக் கிடந்த ரோமாபுரியை எழுச்சி மிக்கதாக வரலாற்றிலே என்றென்றும் நிலைத்து நிற்பதாக உருவாக்கி, இந்த மாபெரும் பேரரசுக்கு மறுமலர்ச்சியினை அளித்திட் டவரே ஜூலியஸ் சீசர்தானே! பழிக்குப் பழி வாங்க நினைத்திடாத, பகைவர்க்கும் அருள் பாலித்திட்ட, பண்புத் திலகம் அவர். அந்த மாமேதைக்கு - தலைமகனுக்கு இந்த நாட்டு மக்கள் எந்தக் காலத்திலும் தலை வணக்கம் புரிந்திட வேண்டாமா? அதற்காகவே நிலையான நினைவுச் சின்னமாக இந்த ஆலயத்தினை எழுப்பிச் சீசருக்குக் காணிக்கையாக்கினார் அகஸ்டஸ் மன்னர்" சிப்பியோ இவ்வாறு விளம்பிடும்பொழுதே செழியன் குறுக்கிட்டான். "அதோ தெரிகிறதே, அது என்ன வளைவு?" 12 - "அதுவா? அதுதான் புதிதாக எழுப்பப்பட்ட அகஸ்டஸ் வளைவு!" 'அது என்ன இவ்வளவு பெரிதாக இருக்கிறதே?" "வெறும் அழகுக்காகவோ கவர்ச்சிக்காகவோ மட்டும் எழுப்பப் பட்டது அல்லவே அந்த வளைவு! இந்த ரோமானியக் குடியரசை மாட்சிமைமிக்கதாக ஆக்குவதற்கு அரும்பாடுபட்ட தனி மனிதர்கள், பெருங் குடும்பங்கள், தளபதிகள், தலைமை நீதிபதிகள் - முதலான தனிச்சிறப்பு வாய்ந்தவர்களின் பெயர்களெல்லாம் அதிலே பொறிக்கப் பட்டுள்ளன. அத்துடன் கால ஓட்டத்தின் கணிதமாகிய 'நாள்காட்டி'யும் அதிலே பொறிக்கப்பட்டுள்ளது. அதனால்தான் இவ்வளவு பெரிதாக அந்த வளைவு அமைந்துள்ளது. சுருங்கச் சொன்னால் அந்த வளைவே ஒரு வரலாற்றுப் பட்டியல்தான்!" சிப்பியோ கூறிடும் விளக்கங்களைக் கேட்கக் கேட்கச் செழியனுக்கு ஒரே வியப்பாக இருந்தது. "எத்தகைய புதுமைகளையெல்லாம் இந்த ரோமாபுரியிலே கொண்டு வந்திருக்கிறார்கள்!" என்று எண்ணிப் பெருமூச்செறிந்தான் அவன். அந்த வளைவினுக்கு அப்பால் தேர் கடந்திட்டதும், பழைய பொது மன்றக் கட்டடங்களுக்கு வடக்காக ஒரு பெருந்திடல் தென்பட்டது. அங்கே பல புதிய தளவரிசைகளும், தூண்களும், சலவைக் கற்களின் குவியல்களும் காணப்பட்டன.