உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/586

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

606

கலைஞர் மு. கருணாநிதி


606 கலைஞர் மு. கருணாநிதி முத்துநகை இவ்வாறு மொழிந்திடவும், செழியன் வேறொரு சிந்தனையில் ஆழ்ந்திட்டான். மறுநாள். முத்துநகை செழியனுக்குத் தந்திட்ட முன்னறிவிப்புப் பொய்யில்லை என்பதைப்போலவே, செனேட் மண்டபம் மனித வெள்ளத்தால் நிரம்பி வழிந்திட்டது. அங்கே செனேட்டர்கள் மாத்திரமின்றி, செல்வச் சீமான்கள், கவிஞர்கள், கலை வல்லுநர்கள், படைத்தளபதிகள், உயர் அதி காரிகள் முதலானோரும் தத்தம் குடும்பத்தினருடன் குழுமியிருந்தனர். மண்டபத்திற்கு வெளியே ஏழை, எளிய நடுத்தர மக்கள் பல்லாயிரக் கணக்கில் திரண்டிருந்தனர்; வெறுங்கையுடன் இல்லை; பரிசுகளுடன்! தமிழகத் தூதுவடி இந்தச் சாதாரண ரோமானியர்களின் நெஞ்சிலே இத்துணை விரையில் - எளிதில் - இடம் பிடித்திட இயன்றது? அதற்கு இரண்டு தலையாய நிகழ்ச்சிகளே காரணங்கள் ஆகும். ஒன்று, அடக்கிடவே முடியாது என்று கருதப்பட்ட காண்டாமிருகத்தினையே அவன் வீழ்த்தியது; இரண்டாவது, மேசனசின் சதி நெருப்பினால் சாம்பலாகி விடாவண்ணம் ஆட்சித் தலைவர் அகஸ்டஸையே அவன் காப்பாற்றியது. தங்கள் தலைவரின் உயிருக்கு உறுதுணையாய் - பேரரணாய்த் - தன் வீரத்தினைப் பயன்படுத்திய தமிழ் மறவனுக்குத் தாங்கள் ஏதேனும் நன்றியின் சின்னமாகத் தந்திடவே வேண்டும் என்கிற துடிப்புடனேயே அந்தச் சாதாரணப் பொதுமக்கள் பெரும் எண்ணிக்கையில் கூடினர். கடற் பரப்பாகவே சியளித்திட்டனர். செழியனைக் கண்டிடவும், அவன் கரத்தினைக்தத் தாங்கள் கொண்டு வந்திட்ட பரிசுகளைத் தந்திடவும் அதன காட் ர்வத்திற்கு ஆல்பஸ் மலையினைக் கூட இணையாகக் முடியா இடித்துப் புடைத்துக் கொண்டு செனேட் மண்டபத்திற்குள் ஒவ்வொருவராகச் சென்று திரும்பிய அவர்களைக் கட்டுப்படுத்துவதற்குள், ரோம் நகரப் படை அணியைச் சார்ந்திட்ட வீரர்களுக்குப் பெரும்பாடாகிவிட்டது. 5. பொதுமக்களும், செனேட்டர்கள் முதலான பெருமனிதர்களும் பரிசுகளை வழங்கி முடிந்ததும், அகஸ்டஸ் எழுந்து நின்றார். அவரது பரந்த முகத்தினில் துயரத்தின் நிழல் நன்றாகப் படர்ந்திருந்தது. தழுதழுத்த குரலில் உரையாற்றிடத் தொடங்கினார் அவர். தமிழ்கத் தூதுவர் செழியனைப் பாராட்டிட நம்முடைய வார்த்தைகளுக்கு வலுவோ பொலிவோ இருப்பதாக நான் கருதிடவில்லை இங்கே உள்ளேயும் வெளியேயும் பல்லாயிரக்