ரோமாபுரிப் பாண்டியன்
607
ரோமாபுரிப் பாண்டியன் 607 கணக்கினில் திரண்டிருக்கிறார்களே, இந்த மனகளின் மாக்கடலைவிட வேறு மாபெரும் பாராட்டு அவருக்குத் தேவை இல்லை. ஆனாலும் இந்த நேரத்திலே உங்கள் எல்லாருடைய சார்பிலும் சில விருதுகளையும் பட்டங்களையும் வழங்குதல் மிகவும் பொருத்தமாக இருக்குமென்று எண்ணுகிறேன். இன்றுமுதல் செழியன் அவர்கள், இந்த ரோமானியப் பேரரசின் 'நிரந்தர குடிமகன்' ஆக ஏற்றுக் கொள்ளப்படுகிறார்; அத்தோடு சிறப்புப் படைத் தளபதிகளுள் ஒருவராகவும் உயர்த்தப்படுகிறார்; அவருடைய தற்காப்பிற்காகவும் நாட்டின் பொதுப் பாதுகாப்பிற்காகவும் அவருக்கென்று சில 'லீஜன்கள்' (படையணிகள்) ஒதுக்கப்படும். இன் அவர் நம்மை விட்டுப் பிரிந்து தம் தாயகம் சென்றிட்டாலும் அவர் விரைவில் திரும்பிடுவார் என்னும் நம்பிக்கையுடனும், திரும்ப வேண்டும் என்னும் கோரிக்கையுடனும் இந் சிறப்பங்கள் செய்யப் படுகின்றன. அடுத்து, அவருக்கு ஒரு புதிய த்தினை வழங்கிட விழைகின்றேன்; 'ரோமாபுரிப் பாண்டியன் என்தே அந்தப் பட்டம்." அகஸ்டஸ் இவ்வாறு மொழிந்து முடிப்பதற்குள்ளேயே செனேட் மண்டபம் மட்டுமல்ல, வெளியே வானமண்டபமே அதிர்ந்திடும் படியாகக் கரவொலிகள் எழுந்து முழங்கின. "ரோமாபுரிப் பாண்டியன் வாழ்க! ரோமாபுரிப் பாண்டியன் வாழ்க!" என்ற ஆர்ப்பரிப்பும், எதிரொலி கிளப்பி விண்ணைப்பிளந்திட்டது. தொண்டையைக் கனைத்துக் கொண்டு அகஸ்டஸ் மீண்டும் தொடர்ந்தார்: "...விலையுயர்ந்த அணிமணிகள், வைரக்கற்கள் அடங்கிய இந்த அழகிய பேழையையும் அவருக்குப் பரிசாக அளிக்கிறேன். இத்துடன் என் உயிருக்குயிரான இன்னொரு பொருளையும் நான் பரிசாக அவருக்கு வழங்குகிறேன். அந்த விலைமதிக்க முடியாத பொருள் எது தெரியுமா?..." என்று அவர் கேட்டு நிறுத்தியதும் எல்லாருமே இமைக்க மறந்து அவரையே திகைப்புடன் நோக்கினர். இதோ, இந்தப் பொருளைத்தான்!' என்று அலடஸ் பெருமகனார் சுட்டிக்காட்டியது ஏதோ ஓர் அஃறிணைப் பொருளையா? அல்ல. பட்டுத் தளிர்மேனி படைத்திட்ட பாவை - தேன் சொட்டும் மொழிக் கிள்ளை - சுடர் வீசும் அறிவு மயில் - ஜூனோவைத்தான்! தங்களுடைய ஆட்சித் தலைவர் அளித்திட்ட அற்புதமான பரிசினைக் கண்டு ரோமானிய மக்கள் துள்ளிக் குதித்தனர். உற்சாகந் தாங்கிடாமல்! அவர்களுடைய கரவொலி கலந்த ஆரவாரம் நீர்வீழ்ச்சி யின் பேரிரைச்சலையே எழுப்பிற்று. அதே வேளையில் செழியனோ?