ரோமாபுரிப் பாண்டியன்
613
ரோமாபுரிப் பாண்டியன் 613 அவள் எங்கே இருக்கிறாள்? என்ன செய்கிறாள்?' என்று முத்துநகையை உசாவிடவும் செழியனுக்குத் தயக்கமாக இருந்தது. பிறகு அவள் ஏதேனும் கேலி செய்திட மாட்டாளா? பொழுது போகாமல் தனிமையில் புழுங்கிக் கொண்டிருந்த செழியன், கதிரவன் எப்போது மேற்கு வானிலே சரிந்திடுவான் என்று காத்திருந் தான். வெயிலின் வெம்மை நன்றாகத் தணிந்துவிட்டது என்று தெரிந்த தும், மரக்கலத்தின் மேல்தளத்திற்குச் சென்றிட்டான். சிறிது நேரத்தில் முத்துநகையும் வந்து சேர்ந்தாள். "என்ன அண்ணா உங்கள் முகம் ஒரு மாதிரியாக இருக்கிறது? உடம்புக்கு ஏதாவது முடியவில்லையா?" - ஏளனம் இழைந்திடும் மெல் லிய முறுவலுடன் கேட்டாள் அவள் "உடம்புக்கு ஒன்றும் இல்லை; நன்றாகத்தான் இருக்கிறேன்" "அப்படியானால் உள்ளந்தான் சரியாக இல்லை என்கிறீர்களா?” "அது போகட்டும்; ஏதோ இரகசியங்களைச் சொல்லப் போவதாக நேற்று செனேட் மண்டபத்தில் என் வாய்க்குப் பூட்டுப் போட்டாயே! இந்த நேரம்வரை அதைப்பற்றி வாயையே திறக்காமல் அந்த ரோமாபுரிக்காரியோடேயே அரட்டையடித்துக் கொண்டிருக்கிறாயே! இப்போதாவது அந்த இரகசியங்களைச் சொல்லலாமே?" ஓ! தாராளமாகச் சொல்லலாம்; அதற்காகத்தானே நான் இங்கே மேல்தளத்திற்கு வந்திருக்கிறேன். ஆனால் என்மீது உங்களுக்கு நிரம்பக் கோபம் போல் இருக்கிறது!” "உன் மீது சினம்கொண்டு இனிமேல் எனக்கு என்ன ஆகப் போகிறது? எப்படியோ அகஸ்டஸ் அவர்களுக்கு உடந்தையாக இருந்து ஜூனோவை என் தலையிலே கட்டி வைத்துவிட்டாய்! ஏன்தான் அப்படிச் செய்தாய் என்று இன்னமும் எனக்குப் புரியவில்லை." "ஐயோ பாவம்! கீழ்த்தளத்திற்குச் சென்றிடும் வாசல் பக்கத்தைத் திரும்பிப் பார்த்தீர்களானால் எல்லாம் புரிந்து விட்டுப் போகிறது!" என்று 'களுக்' கென்று சிரித்திட்டாள் முத்துநகை. செழியன் உடனே திரும்பி நோக்கினான். அங்கே தலை சாய்த்து நின்றிட்ட தளிர்க்கொடியைக் கண்டதுமோ... பூவரசங்காயைச் சுழற்றி விட்டமாதிரி இந்த பூமிப் பந்தே சுற்றுவதுபோல் இருந்தது செழியனுக்கு! 26 'அவள் யார், தாமரைதானா... இல்லை?" தன் அருகில் நின்றிருக்கும் முத்துநகையிடம் பரபரப்புடன் வினவினான் தமிழகத் தூதுவன்.