உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/605

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

626

கலைஞர் மு. கருணாநிதி


626 கலைஞர் மு. கருணாநிதி அத்தகைய அறிவாளிகள் கரிகாலன் காலத்திலும் குடகு நாட்டிலே வாழ்ந்திருக்கிறார்கள். அவர்களுக்குக் கல்லணைத் திட்டத்தின் மூலம் கரிகாலன் வரலாற்றுப்புகழ் பெற்றிடப் போகிறானே என்னும் எரிச்சலும், அழுக்காறும் ஏற்பட்டுவிட்டன. எனவே அந்தத் திட்டம் 'இனிக்காது; கசக்கும்! மணக்காது; நாறும்!' - என்றெல்லாம் ஏளனம் செய்ததோடு அவர்களுடைய வஞ்சக வலையின் காரணமாக கரிகாலர் கண்ணிலும் மேலாகப் போற்றிப் பாதுகாத்து வந்த அந்த கல்லணை அமைப்புச் சின்னம் - பசும்பொன்னில் வார்க்கப்பட்டது -சில நாட்களிலேயே திடீரென்று காணாமற் போய்விட்டது. சில ஆண்டுகள் சென்றதும், குடகு நாட்டைச் சார்ந்திட்ட அழுக்காற் றின் தலைப்பிள்ளைகள் சிலர் கொள்ளை அடித்துச் சென்றிட்ட அந்தக் கல்லணைச் சின்னம், அவர்களுடைய கையைவிட்டுத்தப்பி, மேற்குக் கடற்கரையிலுள்ள முசிறித் துறைமுகப்பட்டினத்திற்கு அடிக்கடி வந்து போய்க் கொண்டிருந்த யவனர்கள் மூலம் ரோமாபுரி அரண்மனைக்குச் சென்றுவிட்டது என்னும் இரகசியச் செய்தி கரிகாலனுக்கு எட்டிற்று. அதனை எவ்வாறேனும் அடைந்திட மாட்டோமா என்னும் ஏக்கம் ஒவ்வொரு நாளும் மன்னனை வாட்டிற்று. யாரை அனுப்பி அதனை ரோமாபுரியிலிருந்து மீட்டு வருவது என்று கரிகாலன் குழம்பிக்கொண்டிருந்த வேளையில்தான்... தாம் சிறைப்பட்டி ருந்த நிலையிலும் ரோமாபுரிக்குப் பாண்டிய வேந்தன் தூதுவர் ஒருவரை அனுப்பவிருப்பதையும், மன்னர் குலத்தினில் பிறந்திட்ட அந்த இளைஞ னான தூதுவனைக் கொண்டே, கல்லணைச் சின்னத்தைப் பெற்றிட வாய்ப்புண்டு என்றும், வேறு சில இரகசியச் செய்திகளையும் உட் பொருள்களாக இணைத்து மறைத்துப் புலவர் காரிக்கண்ணனார் ஓலைச் சுவடிகளில் எழுதி முன்பு செழியன் மூலம் கரிகாலனுக்கு எட்டிடுமாறு செய்திட்டார். செழியனிடமிருந்து அச்சுவடியைப் பறித்துக் கரிகாலன் கண்ணில் படுமாறு மெய்க்காவலன் வைத்துச் சென்றதையும், கடியலூர் உருத்திரங்கண்ணனார் அருகிருக்க அவற்றைப் பின்னர் சோழப்பேரரசன் படித்துவிட்டுக் காரிக்கண்ணனாரின் நல்லெண்ணத்தினைப் புரிந்து கொண்டு அவரைச் சிறையினின்றும் விடுவிக்க ஆணை பிறப்பித்ததை யும் முன்னே கண்டோம். ஆனால் தூதுவராக யாரை அனுப்புவது என்பதில் சிக்கல் ஏற்பட்டு, எதிர்பார்த்தவாறு இளம்பெருவழுதி செல்லாமல், செழியனே புறப்பட்டுச் சென்ற நிலையில் அவனிடம் நேரடியாகத் தம் உள்ளக் கிடக்கையினை வெளிப்படுத்திடக் கரிகாலனுக்குச் சூழ்நிலை வாய்த்திடவில்லை! எனினும், அவனுடைய ஏக்கத்தைப் பற்றி - அதனாலேயே சில காலம் அவன் இரவு நேரங்களில் உறங்காமல் தவித்ததுபற்றி - புலவர் காரிக்