628
கலைஞர் மு. கருணாநிதி
628 கலைஞர் மு. கருணாநிதி காதலிக்கிறாள் என்று அறிந்ததும், அவருக்கு என் மீது ஆத்திரம் வராதா? நான் அவருடைய பகைமையினைத் தேடிக் கொண்டால் அது பாண்டிய மன்னருக்கு நன்றியில்லாமல் நடப்பதாகப் பொருள் ஆகாதா? அதற்கு என்ன வழி செய்யலாம்?' என்று கவலையோடு வினவினான். "அதற்கு ஓர் அருமையான திட்டம் வைத்திருக்கிறேன் செழியன் அண்ணா! கலக்கம் அடையாதீர்கள்!' என்று முறுவலுடன் விடை பகர்ந்தாள் முத்துநகை. "என்ன திட்டம்? 11 'ஊம். அதை இப்போது சொல்லமாட்டேன். நாம் செல்லும் இந்த மரக்கலம் பாண்டிய நாட்டை நெருங்கிடும் பொழுதுதான் கூறுவேன்!' இளம்பெருவழுதியின் எரிச்சலுக்கும் பகைமைக்கும் இலக்காகிடா வண்ணம் முத்துநகை எத்தகைய திட்டத்தினைத் தந்திடக்கூடும் என்று செழியன் தன் மூளையைப் போட்டு குழப்பிக் கொண்டிருக்கும் பொழுதே, அவளோ இன்னோர் அதிர்ச்சியளித்திடும் அரசியல் செய்தி யினை அவனிடம் வெளிப்படுத்தினாள். "செழியன் அண்ணா, நீங்கள் என்னவோ இளவரசரின் பகைமை யினைத் தேடிக்கொண்டால் நமது பாண்டிய வேந்தருக்கே நன்றியில்லா மல் நடந்ததாக ஆகிவிடுமே என்றெல்லாம் அஞ்சுகிறீர்கள்! ஆனால், தமக்கு ஒரு தகுதியை - பதவியை - ஏன், வாழ்க்கையையே வழங்கிய அதே பாண்டியப் பேரரசருடைய உள்ளம் உடைந்திடும் வகையினில், தளபதி நெடுமாறர் எத்துணை நன்றி கொன்ற முறைகளில் எல்லாம் நடந்து கொள்கிறார் தெரியுமா? பெருவழுதிப் பாண்டியர் எப்போது கண்ணை மூடுவார், எப்போது தாம் அரியணையைக் கைப்பற்றலாம் என்று அவர் துடியாய்த் துடித்துக் கொண்டிருக்கிறார். இது நானாக அளக்கின்ற கதையில்லை. பாண்டிய வேந்தரே தம் வாயினால் உரைத்திட்ட உண்மை!" "நீ சொல்வதை என்னால் நம்பவே முடியவில்லையே! நெடுமாற ருக்கு என்மீதுதான் கோபம் என்று நினைத்திருந்தேன். அவருக்குப் பாண்டிய வேந்தரிடமே உள்ளூர பகைமை இருந்திருக்கிறதே! அவர் ரோமாபுரித் தூதுவர். பாண்டிய மண்டலத்துக் கொற்றவராகப் பட்டம் சூட்டிக் கொள்வதிலும் அவர் குறியாக இருந்திருக்கிறாரே! ஆமாம், அவரது உள்நோக்கங்களை மாமன்னரால் எவ்வாறு உணர முடிந்தது முத்துநகை?" "பாண்டிய மன்னரின் உப்பைத் தின்று வளர்ந்த ஒரு நிமித்திகன்தான் இந்த உண்மையைக் கொண்டுவந்து போட்டு உடைத்திருக்கிறான். அவர்