உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/608

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரோமாபுரிப் பாண்டியன்

629


ரோமாபுரிப் பாண்டியன் - 629 எப்போது இறப்பார் என்றும், நெடுமாறன் எவ்வளவு விரைவில் ஆட்சிக் கட்டிலை அடைந்திட முடியும் என்றும் அவனிடம் குறி கேட்டிருக் கிறார்கள்!" 'நெடுமாறரா இப்படிக் குறி கேட்டிடும் அளவுக்கு கீழே இறங்கி விட்டார்? அவருக்குத்தான் அறிவுக்குப் பொருந்திடாத இந்த நிமித்திகம் - சோதிடத்தில் எல்லாம் நம்பிக்கையே கிடையாதே!” "அவருக்கு அதிலே நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். எதற்கும் ஆசைப்படாதவராகவும் கூட இருக்கலாம். அவரைப் போலவே அவ ரைச் சார்ந்துள்ளவர்களும் இருக்கவேண்டும் என்று என்ன நியதி? அவரு டைய மிக நெருங்கிய ஒருவர்தான் இப்படிப்போய்க் குறி கேட்டி ருக்கிறார்! 11 "இவ்வாறு தம்முடைய உறவினர்கள் தடம் புரண்டு நடப்பதற் கெல்லாம் நெடுமாறர் எப்படி இடம் கொடுத்தார்?" "அவர் இடம் கொடுத்தார் என்பதைவிட அவர்கள் அந்த இடத்தை எடுத்துக் கொண்டு விட்டார்கள் என்பதுதான் பொருத்தமானது. நானும் ஒரு பெண்தான். ஆனால் இந்தத் தாமரையே என்மீது சினம் கொண்டாலும் சரி; நான் சொல்வதை நன்றாகப் பதிய வைத்துக் கொள் ளுங்கள் உங்கள் மனத்தில். மனைவி சொல்வதற்கெல்லாம் தலையை ஆட்டுகின்றவர்கள் - மற்றவர்களிடம் போய்க் கடன் கேட்டுக் கையை ஏந்துகின்றவர்கள் - மற்றவர்களைப் பார்த்துத் தேவையில்லாத நேரங் களிலும் தம்மைத் தாழ்வாகவே எண்ணிக் கொள்கின்றவர்கள் - என்றைக் குமே தலை நிமிர்ந்து நடந்திட முடியாது.' 1 ( 'ஆனால் நெடுமாறரை அப்படித் தாழ்வு மனப்பான்மை கொண்டவ ராகக் கருதிட முடியாதே! அவ்வாறு தாழ்வு மனம் படைத்தவர் என்றால் பாண்டிய நாட்டு அரியணையையே கைப்பற்றிட வேண்டும் என்கிற அளவுக்கு அவருக்கு துணிச்சல் உண்டாகி இருக்குமா? "இந்தத் துணிச்சல் அவருக்கு இயல்பாக அமைந்த துணிச்சல் என்று எண்ணுகிறீர்களா?" "பிறகு?" 'அவரை ஒட்டி நிற்பவர்கள் - உறவுக்காரர்கள் - தங்களை உயர்த்திக் கொள்வதற்காக அவருக்கு ஊட்டிக் கொண்டிருக்கும் செயற்கைத் துணிச்சலே இது!" "அப்படியா?”