உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/620

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரோமாபுரிப் பாண்டியன்

641


ரோமாபுரிப் பாண்டியன் ள 641 எண்ணிக் கொண்டிருப்பது எனக்குத் தெரியாமல் இல்லை. ஆனால், மிகச் சிறிய கொற்கைப் பட்டினத்தையே சரியாக நிர்வாகம் செய்ய முடியாத அவர், இந்த மாபெரும் பாண்டிய நாட்டையே எங்ஙனம் கோலோச்சிட இயலும்? மேலும், கவிதைகள் புனைவதிலும், கடற்பயணம் போவ திலும் காலங்கழித்திடுகின்ற அவர், அரசியல் கலையிலே எவ்வாறு அரிமாவாகத்திகழ்ந்திட முடியும்? போதாதற்குக் காதல் நினைவுகள்- இருங்கோவேளின் தங்கை தாமரையின் மேலுள்ள தணியாத மோகம் வேறு அவருடைய சிந்தனையைச் சிதற அடித்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் அவரே அரியணை ஏறுகிறார் என்று வைத்துக் கொண்டாலும் பிறகு இந்நாடும் மக்களும் நலம் பெற்றிட முடியுமா? அத்தோடு, இளம் பெருவழுதியைப் பற்றிய இன்னோர் உண்மையும் அண்மையில்தான் என் செவிக்கு வந்து எட்டியது. அதனைக் கேள்வியுற்றால் நீங்கள் அத்தனை பேருமே அதிர்ச்சியால் மயங்கி விழுந்திட்டால் கூட நான் வியப்படைந்திட மாட்டேன்" என்று பெரும் பீடிகையோடு நிறுத்தினான் நெடுமாறன். அவனுடைய கூற்றினைக் கேட்டுக் கரிகாலன் மெல்ல நகைத்திட் டான். “உண்மையானதோ பொய்யானதோ ஒரு செய்தியினைக் கேட்ட மாத்திரத்திலேயே அதிர்ச்சியோ மயக்கமோ அடைகின்ற அளவுக்கு எங்கள் இதயங்கள் அத்துணை பலவீனமானவை என்று நீங்கள் நினைக் கிறீர்களா? வேடிக்கைதான்! அத்தகைய உள்ளத்தொய்வினை -பக்குவப் படாத மனச் சோர்வினை எப்போதோ கடந்து வந்திருப்போர் என்பது முதுமை ததும்பும் எங்கள் முகத்தினைப் பார்த்தாலே தெரிந்திட வில்லையா? ஆகவே, என்ன உண்மையானாலும் நீங்கள் தாராளமாகத் தயக்கமின்றி வெளியிடலாம்" என்றார் அவர். உடனே தன் தொண்டையைக் கனைத்துக் கொண்டு நெடுமாறன் இவ்வாறு உரைத்திட்டான். "இளம்பெருவழுதி, மறைந்த பெருவழுதிப் பாண்டியரின் உண்மை யான மகன் இல்லை; ஆகவே அரியணைக்கு உரிமை கோரிட அவருக்கு எந்தவித தகுதியும் இல்லை!" திடுக்கிட வைத்திடும் என்னும் கணிப்போடு வெளி வந்திட்ட இந்தச் சொற்கள் சோழப் பேரரசரின் முகத்திலோ, புலவர் காரிக்கண்ணனாரின் முகத்திலோ எத்தகைய சலனத்தையும் ஏற்படுத்திடவில்லை; மாறாகப் பொருள் செறிந்த பெரிய முறுவல் ஒன்றினையே விரிந்திடச் செய்தன. புலவர் காரிக்கண்ணனார் இப்போது தாம் எண்ணுவதை இயம்பிட முற்பட்டார்;