உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/621

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

642

கலைஞர் மு. கருணாநிதி


642 கலைஞர் மு. கருணாநிதி தளபதியாரே! எங்களுடைய நோக்கம் எல்லாம், பெருவழுதிப் பாண்டியரின் இறுதி ஆசை என்னவோ அதனை நிறைவேற்றிட வேண்டும் என்பதுதான். ஆகவே, எங்களுக்கு மிகவும் வேண்டியவர்களான நீங்கள் அரியணை ஏறினால் என்ன? இளவரசன் இளம்பெருவழுதி அரியணை ஏறினால் என்ன? எல்லாம் எங்களுக்கு ஒன்று தான்!" ஆனால் புலவர் விடுவாரா? "எழுத்து மூலமாக அப்படி ஏதேனும் ஆதாரம் வைத்திருக்கிறீர்களா? ஓலைச்சுவடி இருக்கிறதா?" அதைத்தான் அவரால் எழுத முடியவில்லை என்று முன்பே சொன்னேனே! ஆமாம், நீங்கள் மட்டும் எப்படி அவரது இறுதி ஆசையைத் தெரிந்து கொள்ள முடியும்? அதற்கு என்ன ஆதாரம் காட்டிட இயலும்?" "எங்களிடம் ஆதாரம் ஏதும் இல்லையென்றால் உங்களிடம் வீணாக வாயைக்கொடுப்போமா? பெருவழுதிப் பாண்டியர் தம் கைப்பட எழுதி வைத்துள்ள 'இறுதி முறி’0 ஓலைச்சுவடி எங்கள் கைக்குக் கிட்டியுள்ளது" என்று சிரித்தவாறே மொழிந்திட்டார் காரிக்கண்ணனார். அவர்தாம் எழுதியிருப்பாரா, இல்லை வேறு எவராவது பொய்யாக வரைந்திருப்பார்களா என்கிற ஐயப்பாடு உங்களுக்கு இருக்குமானால் நீங்கள் அந்த ஓலைச்சுவடிகளை உங்கள் கண்ணாலேயே நன்றாகப் பார்த்து தெளிவடைந்து கொள்ளலாம்; ஆனால், இன்றைக்கல்ல; நாளை அரண்மனை மண்டபத்தில் பொதுமக்கள் முன்னிலையில் பெருவழுதி யாரின் 'இறுதி முறி' ஓலைச்சுவடி படிக்கப்படும். அதிலே எவ்வாறு குறிப்பிட்டுள்ளதோ அவ்வாறே அரியணைக்குரியவரைத் தேர்ந்தெடுத் துக் கொள்வோம். அது தானே முறை!" என்று முத்தாய்ப்பு வைத்திட்டான் கரிகாலன். - புலவர், புரவலர் இருவரும் புகன்றதைக் கேட்ட தளபதி நெடுமாறனுக்குப் பொறியே கலங்கினார்போல் தலைசுற்றிக் கொண்டு வந்தது. மறுநாள் காலை உதயசூரியனின் ஒளிக்கதிர்களிலே ஒரு தனிக் களையே சுடர்விட்டது! பாண்டியப் பெருநாட்டுத் தலைநகரமே பரபரப்போடு சுறுசுறுப்போடு - சுழன்றிட்டது. தங்களுடைய அடுத்த மாமன்னர் யார் என்று அறிந்திடுவதற்கு ஆர்வம் கொண்டிட்ட பொதுமக்கள், அணைகடந்த வெள்ளமென அரண்மனைக்கு உள்ளேயும் வெளியேயும் நிரம்பி வழிந்திட்டனர்.