ரோமாபுரிப் பாண்டியன்
651
ரோமாபுரிப் பாண்டியன் 651 உண்மையாக இருக்கக்கூடும் என்று என்னால் நம்பவே முடியவில்லை!" என்றான். உடனே, "இளம்பெருவழுதி, இறந்த பாண்டிய வேந்தருக்குப் பிறந்தவர் இல்லை என்பதை மட்டும் நம்புகிறீர்களா?" என்று 'கணீர்' என்று ஒரு குரல்எழுந்து அவனைத் தாக்கிற்று. 86 'அதனை நான் நம்புகிறேன்" என்றான் நெடுமாறன். "ஏன், அது உங்களுக்குச் சாதகமாக இருப்பதனாலா? "இல்லை; இளம்பெருவழுதியை பெற்றெடுத்த தந்தையே என்னிடம் வந்து உண்மையைக் கூறியிருக்கிறார்" சில விநாடிகள் அந்தக் கொலுமண்டபத்திலே பயங்கரமான இடுகாட்டு அமைதியே நிலவிற்று. பின்னர், வெள்ளைச் சேலை அணிந்து தன் தலையினை முக்காடிட்டி ருந்த மூதாட்டி ஒருத்தி எழுந்து நின்றாள். அவளைக் கண்டதும் அமைச்சர்களுக்குப் பின்புற வரிசையில் அமர்ந்திருந்த செழியன் அவள் அருகினில் ஓடினான்; "நீ ஏனம்மா இந்தத் தள்ளாத வயதிலே நம் ஊரை விட்டு இவ்வளவு தூரம் வந்தாய்?" - என்று பரிவோடு கேட்டு அவளது கரத்தினைப் பற்றினான். "உன்னைப் பற்றிய உண்மைகளை இங்கே உரைத்திட வேண்டாமா? அதற்குத்தான்! என்று தன் பொக்கை வாயினைத் திறந்து அந்த மூதாட்டி நகைத்திட்டாள். "உன்னுடைய வார்த்தைகள் எல்லாம் இங்குள்ள பெரிய மனிதர்களிடம் எடுபடுமா? உன்னை யார் நம்பிடப் போகிறார்கள்?"- செழியன் இவ்வாறு சலித்தாற்போல் கூறியது, நெடுமாறனைத் தவிர மற்ற எல்லோரிடமும் ஒருவித உருக்கத்தினை விளைத்திட்டது. "என்ன செழியா! அப்படிச் சொல்லி விட்டாய்? ஆமாம், அந்த மூதாட்டி யார்?” என்று வினவினான் கரிகாலன். "என்னுடைய தாய்!" என்றான் செழியன். "சோழப் பேரரசே!" இவன் புகல்வது பொய். நான் இவன் தாய் இல்லை; வளர்ப்புத் தாய்தான்!' என்றாள் அக்கிழவி. (4 "அப்படியா? சரி. பெருவழுதிப் பாண்டியர் எழுதி வைத்துச் சென்றதைச் சற்றுமுன் படித்தேனே. அதனைக் கேட்டீர்களா” 'ஓ! நன்றாகக் கேட்டேனே! கண்கள் தான் எனக்குப் பஞ்சடைந்து விட்டனவே தவிரக் காது இன்னும் செவிடாகி விடவில்லை. பாண்டிய