பக்கம்:லியோ டால்ஸ்டாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

லியோ டால்ஸ்டாயின்

நிகோலஸ் மனைவி இளவரசி மேரியும் தனது கணவரைப் போலவே அன்பெனும் இரக்க குணத்துடன் அவர்களிடம் பழகி பண்பெனும் பலனைப்பெற்று, பாசத்தை வளர்த்துக் கொண்டாள்.

இவ்வாறாக அவர்கள் பண்புடனும் பாசத்துடனும், உற்றார், சுற்றார் ஆதரவுடனும் விளங்கி, நல்ல குடும்பம் பலகலைக் கழகம் என்பதற்கு ஈடாக, ஐந்து மக்கட் செல்வங்களைப் பெற்றார்கள். அந்த ஐவரில் ஒருவரான நம்முடைய நாயகனான லியோ டால்ஸ்டாய், 9.9.1828-ஆம் ஆண்டில் பிறந்தார்.

லியோ டால்ஸ்டாய் தாயார் இளவரசியாக செல்வாக்குப் பெற்று வளர்ந்திருந்தாலும், தான் பெற்ற பிள்ளைகளைப் பாதுகாக்க, வளர்க்க சீராட்ட தாதியர்களையோ, பணிப் வைத்துக் கொள்ளாமல், தானே நேரடியாக, தகனது எல்லா வசதிகளையும் கவனித்துக் கொள்வதை வழக்கமாக்கிக் கொண்டார்.

தந்தை நிகோலசும், தானே நேரிடையாகக் குழந்தைகளை வளர்ப்பதிலே போதிய கவனம் செலுத்தி, அக்கறையோடு வளர்த்துவந்தார். இந்த நேரத்தில் லியோ டால்ஸ்டாய் சிறு குழந்தையாக இருக்கும்போதே அவருடைய அன்னை இளவரசி மேரி மரணமடைந்தார். இதனால், டால்ஸ்டாய் இளமையிலேயே தாயற்ற பிள்ளையானார்!

ஜெர்மன் வேலைக்காரனான தியோடார் ரஸ்ஸெல் என்பவரும், நோவ்னா என்ற வேலைக்காரியும் குழந்தை டால்ஸ்டாயை வளர்க்கும் பொறுப்பை ஏற்றார்கள். அவர்களை மேற்பார்க்கும் பொறுப்பை டால்ஸ்டாய் அப்பாவுடன் பிறந்த அத்தையும் கவனித்துக் கொண்டார். அவரது அத்தை ஒழுக்கத்தின் சிகரம், குழந்தைகள் மேல் அளவில்லா பாசம் வைத்திருந்தவர், அதனால், டால்ஸ்டாய் வளர்ப்பு நன்றாகவும்,