பக்கம்:லியோ டால்ஸ்டாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

41

எண்ணிய ரஷ்ய மக்களின் சீர்த்திருத்தக் காரர்களது பிரிவுகள், கிளர்ச்சிகளையும் போராட்டங்களையும் தொடர்ந்து நடத்தி வந்தன. ஆனால், நில முதலாளிகளும், அரசியல் தலைவர்களில் சிலரும் இந்தச் சீர்திதுத்தங்களைக் கடுகளவும் விரும்பவில்லை.

ஜார் மன்னர் மக்களது கோரிக்கைகளை தலைவர்கள் ஏற்கும்படி செய்யவேண்டும் என்று ஒரு குழுவை அமைத்தார்! அந்தக் குழுவிடம் ஜார் மன்னர் சீர்திருத்தப் பொறுப்பை ஒப்படைத்தார். இந்தக் குழு மூன்றாண்டுகளாக விசாரணைகளை நடத்தி, 1861-ஆம் ஆண்டின் போது எப்படியும் அடிமைப் பழக்கத்தை, அதன்சார்பாக மனிதனை விலைக்கு விற்று விடும் மனித உரிமை மீறில்களை ஒழிந்துவிட வேண்டும் என்று அறிவித்தது.

இந்த இக்கட்டான அரசியல் சமுதாயவியல் கொடுமைகளுள் ஒன்றான அடிமை முறைப் பழக்கத்தை விளக்கி, அதன் விரிவான வரலாறுகளை உணர்வு பூர்வமாகப் பல கட்டுரைகளில் எழுதி, டால்ஸ்டாய் பெரும் எழுத்துப்போரைச் சளையாமல் நடத்தி வந்தார். அவர் எழுதிய பல கதைகளில் இந்த தத்துவ ஈனத்தைக் கண்டித்தார். அதே நேரத்தில் அந்த அடிமைகளின் கேவலமான அவல வாழ்க்கையை நன்றாக வருணனை செய்து, உணர்ச்சியே உருகும் வடிவத்தில் கதையாக்கினார். இவ்வாறு டால்ஸ்டாயால் எழுதப் பட்ட உலகப் புகழ் பெற்ற கதைகளில் ஒன்று தான் ‘போலிகோஷ்கா’ என்ற கதையாகும். அந்தக் கதையில் வரும் அடிமை ஒழிப்புத் தத்துவம், மக்கள் மனத்தை நெகிழ வைத்துக் கண்களை அருவியாக்கிக் காட்டியது. எண்ணற்றோர் அக்கதைகளை எண்ணற்ற முறைகள் படித்துக் கண்ணீர் சிந்தினார்கள்.

ஜார் நிக்கோலஸ் மாண்டு அலெக்சாண்டர் என்ற ஜார் மன்னன் அமைத்த விசாரணைக் குழுவினர் - அடிமைகளுக்கும், நிலக்கிழார்களிடமிருந்து விடுதலை அளித்தது. இதன்