பக்கம்:லியோ டால்ஸ்டாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
இன்றும் உலகம் போற்றும் இரு பெரும் நாவல்கள்!

டல் நலம் பெற்ற எழுத்துலகச் சக்கரவர்த்தியான லியோ டால்ஸ்டாய், தனது சொந்தக் கிராமத்துக்கு மீண்டும் திரும்பினார். 1862-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொள்ள விரும்பினார். அப்போது அவருக்கு வயது முப்பத்து நான்கு!

ஒரு டாக்டரின் மகள்; பெயர் பேஹர்; அவளுக்கு வயது பதினெட்டு! தன்னை விட மணப்பெண் பதினாறு வயது சிறியவளாக இருந்தாலும், அவர் அந்தப் பெண்ணையே விரும்பி மணம் செய்து கொண்டார்! தம்பதிகள் இருவரும் எழுதுகோலும் தாளும் போல ஒருவரை ஒருவர் பிரியாமல் மனமொத்து வாழ்ந்து வந்தார்கள்.

இல்வாழ்க்கையை ஏற்ற பின்பும் டால்ஸ்டாய் தனது இலக்கியச் சேவையை மீண்டும் தொடர்ந்தார். கட்டுரைகள், கதைகள், நாவல்கள் போன்றவற்றை எழுதிக் குவித்தார். ஏற்கனவே, ருஷ்ய நாடு முழுவதும், ஏன் அரண்மனைவாசிகள் உட்பட வாசகர்கள் அவருக்கு மிக அதிகமாக இருந்தார்கள்.

இடையிடையே கல்விச் சோதனைகளும், அயல்நாட்டுப் பயணங்களும் அரசுத்துறை இடையீடுகளும், அவரது எழுத்துப் பணியைத் தொடர முடியாமல் செய்தன. இப்போது மாணவாழ்க்கை ஏற்றபின்பு பொருளாதார வளர்ச்சிக்காகவும்