பக்கம்:லியோ டால்ஸ்டாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

79

உருவாகி, கெட்ட பெயரை ஏற்படுத்தின. எனவே, நாட்டிலே நடைபெறும் இந்தச்சம்பவங்கள் எல்லாம் கண்டு டால்ஸ்டாய் வேதனைகளை அடைந்தார்.

நாட்டின் நிலைதான் இவ்வாறு இருந்தது என்றால், தனது வீட்டின் சூழலாவது அமைதியாக இருந்ததா எனில் இல்லை. அவரது மனைவி பணத்தாசையால் அவர் மனதை நாள்தோறும் வருத்தி வந்தாள். இத்தனைக்கும் டால்ஸ்டாயின் மனைவி படித்தவள்; நாட்டுக்கு அவர் செய்து வந்த பணிகளில் சமபங்குடன் ஒத்துழைத்து வந்தாள். ஆனாலும், அவர் ஏன் மக்களுக்காக இப்படியெல்லாம் சேவை செய்கிறார் என்ற எண்ணத்தை அவளால் புரிந்து கொள்ள முடியாததால் அவரை இவ்வாறெல்லாம் வேதனைப் படுத்தி வந்தாள்.

டால்ஸ்டாய் பணத்தை மதிப்பவர் அல்லர்; மக்கள் மனம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதிலே நாட்டம் கொண்டவர் அவர். பண ஆசையும், வெறியும் அவர் மனைவிக்கு அளவுக்கு மீறி இருந்தது. அதனால் மக்களுக்கு அவர் செய்யும் தியாகத்தின் அருமை அவளுக்குத் தெரியவில்லை. அவருடைய இரக்க குணமும், மனிதாபிமானமும் அவளுக்கு மன எரிச்சலை உருவாக்கிவிட்டன.

தனது சொத்துக்களை எல்லாம் டால்ஸ்டாய் மக்கள் தொண்டு என்ற பெயரில் வீணாகச் செலவழித்து விடுவாரோ, பிறகும் தானும் தனது பிள்ளைகளும் அனாதையாக வாழும் நிலை ஏற்பட்டு விடுமோ என்ற கவலை அவளை நாள் தோறும் அரித்துக் கொண்டே வந்தது. ஆனால் அவருடைய மனைவியும் மக்களும் தங்களது பணத்தைக் கண்டபடி செலவு செய்து பாழ்படுத்தி வந்தார்கள். இவற்றைக் கண்ட அவர் இவர்களைக்