பக்கம்:லியோ டால்ஸ்டாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

87

“எனவே, என்னுடைய இந்தச் செயல்களால் உங்களுக்குத் துன்பம் ஏற்பட்டால், நீங்கள், குறிப்பாக, நீ என்னை மன்னிக்க வேண்டும். நான் துறவு போவதை நீங்கள் சந்தோஷத்துடன் அனுப்பி வைக்க வேண்டும். எங்கும் என்னைத் தேட வேண்டாம், என் மேல் எந்த விதமான குற்றங்களையும் கூற வேண்டாம்.”

“நான் உங்களைத் துறந்து போவதால், உங்கள்மீது எனக்கு எந்தவிதக் கோபமும் இல்லை நான் எந்தக் குறிக்கோளோடு, கண்ணோட்டத்தோடு உலகத்தைப் பார்க்கிறேனோ, அந்தப் பார்வையோடு நீங்கள் உலகத்தைக் காண முடியாது; புரிந்து கொள்ள முடியாது என்று எனக்குத் தெரியும்.”

“இதே காரணத்தால், நீ உனது வாழ்க்கைப் போக்கை மாற்றிக் கொள்ள முடியாது. இதற்காக, நீ எந்தத் தியாகமும் செய்ய முடியாது; அதைப் பற்றி உன்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. அதற்காக நான் உன்னைக் குற்றம் சாட்டமாட்டேன். ஆனால், நாம் இருவரும் கணவன் மனைவியாக வாழ்ந்து முப்பத்தைந்து ஆண்டுகளை நன்றியுணர்வோடும், அன்புணர்வோடும் நினைவு கூர்கிறேன்.”

“உனது வாழ்க்கையின் படி. நீ என்றுடன் உனது பணிகளை மிகவும் உறதியாக நிறைவேற்றிய வாழ்க்கையின் தொடக்கக் காலத்தையும் நான் மறக்க முடியாது. உன்னால் முடிந்ததை எல்லாம் நீ அப்போது என்னுடன் உலகத்துக்குச் செய்தாய். அதை எவ்வளவு புகழ்ந்தாலும், போற்றினாலும் தகும்.”

“ஆனால், வாழ்க்கையின் பிற்பகுதியில், கடந்த பதினைந்து ஆண்டுகளாய் நம் இருவருக்குள் அதிக வேற்றுமை ஏற்பட்டு விட்டது. அதற்குத் தவறு என்னுடையது என்று கூற முடியாது. ஏனெனில், நான் எனக்காகவோ, மற்றவர்களுக்காகவோ மாறவில்லை. எனது இயற்கை உணர்ச்சிகளில் ஏற்படும்