பக்கம்:லியோ டால்ஸ்டாய்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ஒரு கேள்வியும் - ஒரு பதிலும்



  எழுத்தாளன் ஒருவன், எடுத்துக் கொண்ட பொருளுக்கு உண்மையாகவும், தனக்குத்தானே விசுவாசமாகவும், படிக்கிறவர்களும், பார்க்கிறவர்களும் பயனடைய வேண்டும் என்ற மனிதாபிமானத்துடனும் எழுதினால், அவன் படைப்பு ஒரு சத்திய மாகிவிடும் என்ற எனது ஆழ்ந்த நம்பிக்கையை, இந்த நாடகத்தின்மூலம் மீண்டும் தரிசித்திருக்கிறேன்.
  மனித வரலாற்றில், இதுவரை எந்த படைப்பாளியும் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத அளவிற்கு சுய சோதனை செய்து, அவர்கள் எட்ட முடியாத அளவிற்கு புகழெய்தியவரும், நோபல் பரிசுகள் பெற்ற இலக்கியவாதிகள் கூட பொறாமைப்பட முடியாத அளவிற்கு, வெகு உயரத்தில் நிற்பவரும், இன்றும் ஸோவியத் அரசின் பராமரிப்பில் உள்ள தன் நினைவில்லத்திற்கு, நாள்தோறும் குறைந்தபட்சம் ஆயிரம் பேரை வரவழைப்பவரும், தன் நாட்டில் மட்டும் 98 மொழிகளில் தனது படைப்புக்கள்