பக்கம்:லியோ டால்ஸ்டாய்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
xi



  வெளியாகும் அளவிற்கு, இறந்தும், வாழ்வாங்கு வாழ்பவருமான லியோ டால்ஸ்டாயை, நாடக ரூபத்தில் காட்ட முடியும் என்று நான் நினைத்துக்கூடப் பார்க்காத சமயத்தில்.
  இந்த ரஷ்ய ஞானியின் 150ஆவது பிறந்த ஆண்டை, செம்மைப்படுத்துவதற்காக, இந்தோ-சோவியத் நட்புறவுச் சங்கத்தின் சார்பில் ஓர் அமைப்புக் கூட்டம் நடந்தது. பல்வேறு துறைகளைச் சேர்ந்த அறிஞர் பெருமக்கள் கலந்துகொண்ட அந்தக் கூட்டத்தில், டால்ஸ்டாய் 150ஆவது ஆண்டு விழாக் கமிட்டி அமைக்கப்பட்டது. கமிட்டிக்கு, கவிஞர்கள் கே.ஸி. எஸ்.அருணாசலம், புத்தனேரி சுப்பிரமணியம் ஆகியோரும், நானும் செயலாளர்களாக நியமிக்கப்பட்டோம். இந்தச் சமயத்தில், சங்கத்தைச் சேர்ந்த திரு.நவாப்ஜான் என்ற இளைஞர், டால்ஸ்டாயின் படைப்புக்களில் ஒன்றை நாடகமாக்கித் தரவேண்டும் என்று கேட்டபோது, நான் டால்ஸ்டாயின் இறுதிகால வாழ்க்கையை நாடகமாகக் காட்டினால் சிறப்பாக இருக்கும் என்று வாய்தவறிச் சொல்ல, அந்த இளைஞர் அதையும் நானே முடிக்க வேண்டும் என்றார். ‘புலிப்பால் கொண்டு வா' என்பது போல், தட்டிக் கழித்துவிடலாம் என்ற தைரியத்தில், அவரை சம்பந்தப்பட்ட புத்தகங்களைக் கொண்டு