பக்கம்:லியோ டால்ஸ்டாய்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xiii மக்களின் தார்மிகத் துணையுடன், எழுத்துப் பிரசவம் இரண்டு நாளில் முடிந்துவிட்டது. சுகப் பிரசவந்தான். ஆனால் இந்தப் பிரசவத் திற்கான காரியம், பத்தாண்டுகளுக்கு முன்பு டால்ஸ்டாயின் வாழ்க்கை வரலாற்றைப் படிக்கும்போதே ஏற்பட்டிருக்க வேண்டும். என்றாலும், நான் எழுதியிருப்பதன் இயல்பு பற்றி எனக்கே புரியாத அனுமான்' நிலையில் இருந்தபோது, இதைப் படித்துப் பார்த்த என் நண்பரும், ஜனசக்தி உதவி ஆசிரியருமான திரு. சோமு, அனுபவம் வாய்ந்த கலைஞர்களால்தான், மனம் நெகிழச் செய்யும் இந்த உரையாடலுக்கு உயிர் கொடுக்க முடியும் என்றும், நாடகம் மிகச் சிறப்பாக வரும் என்றும் தொலை நோக்கோடு சொன்னார். இந்தச் சந்தர்ப்பத் தில், திரு. நவாப் ஜானால் நாடகத்தை எடுத்து நடத்த இயலாத நிலை ஏற்பட்ட போது, நான் கலைமாமணி பி. ஏ. கிருஷ்ணனிடம், படித்துக் காண்பித்தேன். நான் படிக்கப் படிக்க, அவர் அங்கேயே ஒரு டால்ஸ்டாயாக மாறிவிட்டார். நாடகத்தை இவரிடம் எப்படியாது 'தள்ளி விட வேண்டும் என்று நான் நினைத்துக் கொண்டிருந்தபோது, அவரோ, எனக்குத் தான் வேணும், எனக்குத்தான் வேணும். என்று அடம் பிடித்தார்.