பக்கம்:லியோ டால்ஸ்டாய்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xiv உடனே நான், டால்ஸ்டாய் கமிட்டியின் முன்னால் எழுதியதைச் சமர்ப்பித்தேன். கமிட்டியும் (படித்துப் பார்த்துவிட்டு) நாடகத்தை அரங்கேற்ற மகிழ்ச்சியுடன் சம்மதித்தது. கவிஞர் கே.சி.எஸ். அருணா சலம், உரையாடல்களை எடிட்' செய்த துடன், நாடக ஒத்திகைகளையும், சொந்தச் சிரமங்களைப் பார்க்காமல், பார்த்தார். அவருடைய அன்பான மேற்பார்வையில், கலைமாமணி பி. ஏ. கிருஷ்ணன் அவர்களின் டைரக்ஷ னில், அவரும், கலைமாமணி தாம்பரம் லலிதாவும், இதரக் கலைஞர்களும் பங்கேற்ற இந்த நாடகம், டால்ஸ்டாய் ஆண்டுவிழாக் கமிட்டி, இந்தோ- சோவியத் நட்புறவுச் சங்கம், சோவியத் துரதரக கலாச்சாரப் பிரிவு- ஆகிய முத்தரப்பின் சார்பில், 9-11-1978-ல், கல்கி ஆசிரியர் திரு. கி. ராஜேந்திரன் தலைமையில், சோவியத் கலாச்சார மாளிகையில் அரங்கேற்ற மாகியது. நாடகத்தைப் பார்த்த அத்தனை பேரும் அறிவு வசப்பட்டவர்கள். அதாவது உணர்ச்சி வசப்படாதவர்கள். அன்று அவர்களும், நாடகத்தைப் பார்த்து, தாங்கள் மெய்மறந்து போனதாய்ச் சொன்னதுடன், என் முதுகைத் தட்டிக் கொடுத்தபோது, என்னைப் போன்ற ஒரு சாதாரண வாதிக்கும், அசாதாரண பெயரைக்