பக்கம்:லியோ டால்ஸ்டாய்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

XV கொடுத்த டால்ஸ்டாயை மானசீகமாக வணங்கிக் கொண்டேன். மெயில்', 'இந்தியன் எக்ஸ்பிரஸ்', 'இந்து முதலிய ஆங்கிலப் பத்திரிகைகளும், மக்கள் செய்தி, ஜனசக்தி, அண்ணா, தென்னகம், தினகரன், தினத்தந்தி, மாலை முரசு, ஆனந்த விகடன், தாமரை முதலிய தமிழ்ப் பத்திரிகை களும், நாடகத்தை ஒரு மனதாகப் பாராட்டின. மக்கள் செய்தியில், இரண்டு தடவை விமர்சனங்கள் வந்தன. ஆனந்த விகடன் கலைஞர் பி. ஏ. கிருஷ்ணனை, ‘டால்ஸ்டாய் கிருஷ்ணன் என்று தகுதி யுணர்ந்து பாராட்டியது. இதையடுத்து, ஒரு சபாவில் நடந்த இந்த நாடகத்தை சபாத் தனமாக இருக்கும் என்று வந்து, ஏமாற்ற மடைந்த ஒரு சிலர், ஊளையிட்ட போது, 'இந்துப் பத்திரிகை சுட்டிக் காட்டியது போல், பொதுமக்களே, ஊளையர்களை' வெளியேற்றியது, டால்ஸ்டாயின் பலம். அந்த பலத்தை ஆதாரமாகக் கொண்ட இந்த நாடகத்திற்கு வெற்றி. நல்ல வெற்றி. இந்த நாடகத்தை திருவாளர்கள் ஆர். நல்ல கண்ணு, பி. கே. ராமசாமி, தா. பாண்டியன், சி. ஏ. பாலன், க. மாணிக்கம் முதலிய தலை வர்களும், சிறந்த இலக்கியவாதிகளான திரு. வி. இராமமூர்த்தி, ஐ.ஏ.எஸ், திரு. திவான் முகம்மதுஐ.ஏ.எஸ், திருபரணிதரன், ‘மாஜினி'