பக்கம்:லியோ டால்ஸ்டாய்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xviii டால்ஸ்டாய் இறந்ததும், அந்த அம்மாவே, நிலத்தைக் குடியானவர்களுக்குப் பிரித்துக் கொடுத்தார். டால்ஸ் டாய் மியூஸியம் அமைப்பதற்கு, ஜார் அரசாங்கத்திடம் மன்றாடியவர் இந்தத் தாய். ஒரு கேள்வி: மேதைகளின் சொந்த வாழ்க்கையைக் கிளற வேண்டியது அவசியமா என்ற ஒரு கேள்வி எழுவது இயற்கையே. எனினும், குப்பைத்தனமாக வாழ்ந்தவர்களின் வாழ்க்கைக் கூறுகளைக் கிளறினால், குப்பைதான் மிஞ்சும். அதே சமயம், கடலை விட ஆழமாகி, வானைவிட உயர்ந்து நிற்கும் டால்ஸ்டாயின் வாழ்க்கைப் பகுதிகளைக் கிளறும்போது, ஓர் எழுத்தாளன் எப்படி வாழ வேண்டும், எழுத்து எப்போது சாத்ய மாகும், அது எப்போது சத்தியமாகும் என்பன போன்ற கருத்து முத்துக்கள் கிடைக்கும். இந்த ஞானியின் வாழ்க்கை அவரது படைப்புக்களுக்கு இணையான ஒரு காவியம். இந்தக் காவியத்தின் கடைசிக் கூறை- சொல்லப்போனால் உச்சகட்டத்தை நாடக நூலாக வெளியிடும் கிறிஸ்தவ இலக்கிய சங்கத்திற்கும், மேடை நாடக உரையாடலை, நூலுக்கேற்ப மேம்படுத்திய பேராசிரியர் திரு. பாக்கியமுத்துவுக்கும், சிறந்த ஆய்வுரை தந்த மிகச்சிறந்த இலக்கிய