பக்கம்:லியோ டால்ஸ்டாய்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி 1 g)l—ib : u jiroiv[5uurt Gt jrt6üuutrowtrt (Yasnaya Polyana) பண்ணை, வீட்டின் படிப்பறை - காலை வேளை. பாத்திரங்கள் : டால்ஸ்டாய், செர்ட்கோவ், மாணவன், சோன்யா, (டால்ஸ்டாய் செருப்பு தைத்துக் கொண்டிருக்கிறார். அவரது ஆன்மிக மாணவர் செர்ட்கோவ் வருகிறார்) செர்ட் : (அதிர்ச்சியுடன் உற்றுநோக்கி) அய்யா. இந்த தள்ளாத வயதில் முதுகை வளைத்து இப்படி செருப்பு தைத்தால் உடம்பு என்ன ஆவது? எங்களுக்காக... இருட்டு வீட்டில் இல்லாத குருட்டுப் பூனையாகத் தவிக்கும் பாமர மக்களுக்காகத்தான் நீங்கள் வாழ்கிறீர்கள். உங்களுக்காக வாழவில்லை. இந்த உடம்பும் உயிரும் உங்களுக்குச் சொந்தமல்ல. எங்களுக்கே சொந்தம்... டால்ஸ் : நீ எந்த பாமர மக்களைச் சொல்கிறாயோ அந்தப் பாமர மக்களில் ஒருவனான என் பண்ணையாளுக்காக தைக்கிற செருப்பு இது. அவர்கள் பிரபுவாக வாழும் இந்த ஏலாதவனுக்கும்