பக்கம்:லியோ டால்ஸ்டாய்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 + லியோ டால்ஸ்டாய் இதுமாதிரி எத்தனையோ மற்றவர்களுக்கும் செய்துவரும் உதவிக்கும், சிந்தும் வேர்வைக்கும் என் தோலைக்கூட செருப்பாகத் தச்சுப் போடலாம்... அது என்னால முடியாது, இப்படியாவது தைக்கலாம்னு. செர்ட் ; உடம்பு என்னாவறது? டால்ஸ் : ஒன்றும் ஆகாது. கைதிகளிடம் வேலை வாங்கு வது ஏன் தெரியுமா செர்ட்கோவ்? உடலுழைப்பு மூலம் ஒருவன் மனமும் சுத்தப்படும் என்கிற தத்துவம்தான் காரணம். இந்த கிரிமினல் ஜார் அரசுக்கு, நல்லவர்கள் கிரிமினல்களாக... கிரிமினல்கள் யோக்கியர்களாகத் தெரியுது. இந்த நிலை நீடிச்சா புரட்சி வர்ாமல் போகாது. செர்ட் : அது வரட்டும் போகட்டும். ஏதாவது எழுதினிர் களா? டால்ஸ் ; (செருப்பு தைக்கும் ஊசியைக் காட்டியபடி) இந்த ஊசியை விட பேனா முக்கியமா? என் அருமை பண்ணையாளுக்குப் படைக்கிற செருப்பைவிட எந்தப் படைப்புச் சிறந்தது? செர்ட் : உங்களுக்கு மனசு சரியில்லேன்னு நினைக் கிறேன். உள்ளத்தையும் உடம்பையும் வருத்துவது சரியில்லை. டால்ஸ் : நிறுத்து உன் பல்லவியை. இந்தச் செருப்புத் தைக்கிறதுல இருக்கிற இன்பத்துக்கு இணையா எந்த இன்பத்தையும் நான் அனுபவிக்கவில்லை. போரும் சமாதானமும் எழுதும்போது ஏற்பட்ட இன்பத்தை