பக்கம்:லியோ டால்ஸ்டாய்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 3 விட இது அதிகம். அன்ன கரீனா எழுதும்போது ஏற்பட்டது ஆனந்தம்... ஆனா இந்தச் செருப்பைத் தைக்கும்போது பரமானந்தம். 'புனர்ஜென்மம்’ எழுதும்போது நான் ஒரு போலி ஜென்மம் என்று நினைத்தேன். செருப்பைத் தைக்கத் தைக்க... நான் நிஜமாவே புனர்ஜென்மம் எடுக்கப் பார்க்கிறேன் செர்ட்கோவ். செர்ட் ; கொஞ்ச நேரம் ஓய்வு எடுத்துக்குங்க... தயவு செய்து... டால்ஸ் : நீதான் விடாக்கண்டனாச்சே ஆமாம். கையில் என்ன... இதெல்லாம்... செர்ட் : நான் வந்ததே இவற்றை உங்களிடம் படிக்கத் தான். இது லண்டன் டைம்ஸ் எழுதியிருக்கிற பாராட்டு (படிக்கிறார்.) டால்ஸ்டாய் உண்மை யிலேயே ஒரு தேவதை. அவரது ‘உனக்குள்ளேயே சொர்க்கம் உள்ளது என்ற நாவல் மனிதகுல வழிகாட்டி. இது பிரெஞ்ச் பத்திரிகை. ஜார் மன்னர். டால்ஸ்டாயுடன் சமாதானம் செய்துகொள்ள வேண்டும்- இல்லையானால், ஜாரைக் காப்பாற்ற யாராலும் முடியாது’ என்று எழுதியிருக்கு. இது இத்தாலிப் பத்திரிகை. உங்களின் கலை என்றால் என்ன?’ என்கிற கட்டுரையை விமர்சித்திருக்கு. படிக்கிறேன் பாருங்க- கலை என்றால் அது அடிமன வருடல், இதய பிரக்ஞை, உள்ளார்ந்த வெளிப்பாடு, பாதிப்பு கொடுக்கும் பாதிப்பு. டால்ஸ்டாய் மிக அருமையாக...”