பக்கம்:லியோ டால்ஸ்டாய்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 5 இவங்க வேற அவுங்க இலக்கிய ஆணவத்தைக் காட்ட எனக்கு இரை போடறாங்க. விட்டுத்தள்ளுவேறு ஏதாவது பேசுவோம். செர்ட் : உங்களுக்கு ஏன் இப்படிக் கோபம் வருது? (கல்லூரி மாணவன் வரும் காலோசை கேட்கிறது. வருகிறான்) என்ன வேணும்? மாண : நான் டால்ஸ்டாயைப் பார்க்கணும், அவரு எங்கே இருக்காரு, இப்போ பார்க்க முடியுமா? செர்ட் : டால்ஸ்டாயை நீ பார்த்ததே இல்லையா? மாண : (செர்ட்கோவை உற்றுப் பார்த்து) நீங்கதான் டால்ஸ்டாயா?. நீங்கதான் டால்ஸ்டாயா... குருஜி. நீங்க... மகத்தான. சிறந்த... அருமையான. ஆழமான... செர்ட் : இந்தாப்பா... என் முகத்தை நல்லாப் பாரு. டால்ஸ்டாய்க்கு இருக்கிற களை ஏதாவது இருக்கிறதா? மாண: இல்லை... உங்க முகம் சைத்தான் முகம் மாதிரி தெரியுது. செர்ட் : என்ன... மாண : எதுக்கு... வழவழாப் பேச்சு... இப்போ நான் டால்ஸ்டாயைப் பார்க்கணும். அதுக்கு வழி சொல்லுங்க. செர்ட் : சைத்தான் வழிகாட்டறது தப்புப்பா.