பக்கம்:லியோ டால்ஸ்டாய்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 + லியோ டால்ஸ்டாய் மாண ! உங்ககிட்டே என்ன பேச்சு... (செருப்பு தைத்துக் கொண்டிருந்த டால்ஸ்டாயிடம் நெருங்கி) இந்தாப்பா செருப்பு தைக்கிறவரே (கோட்டுப் பையில் இருந்து எடுத்து) இந்தா ஒரு ரூபிள் (Ruble). உனக்குதான் வச்சுக்கோ. நான் இப்போ டால்ஸ்டாயைப் பார்க்கணும். டால்ஸ் : அதுக்கு இது லஞ்சமா? மாண : இல்லை. அன்பளிப்பு. டால்ஸ் : லஞ்சம் கொடுக்கிற பழக்கம் உனக்கு எப்படி வந்தது? மாண : ஜார் மன்னர் அரண்மனையைச் சுற்றிப் பார்க் கிறதுக்கு பல பேர் பல பொருளை வாங்கறாங்க... அதனாலதான்... டால்ஸ் ; போகட்டும். இதோ இவர்கிட்ட கொடுக்காமே என்கிட்ட ஏன் கொடுக்கிறே? மாண இவரு போட்டிருக்கிற உடைகளைப் பார்த்தா ஆசாமி நிறைய கேட்கிறவர் மாதிரி தெரியுது. இவருக்கு லஞ்சம் கொடுக்கிற அளவுக்கு நான் பணக்காரன் இல்லை. இந்தா... ரூபிளை எப்படி சந்தோஷமா வாங்கினியோ அப்படி சந்தோஷமா டால்ஸ்டாயையும் கூட்டிக்கிட்டு வா. டால்ஸ் : அந்தக் குட்டிச்சாத்தானை நீ அவசியம் பார்க் கனுமோ? மாண ! உனக்கு இன்னொரு ரூபிள் வேணுமா? நேரடி யாவே கேக்கறது.