பக்கம்:லியோ டால்ஸ்டாய்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 7 செர்ட் : அவருதான் டால்ஸ்டாய். மாண : நீங்களும் நேரடியாகவே கேளுங்களேன். மூணு ரூபிள் தர்றேன். ஏன் கிண்டல் பண்றீங்க. டால்ஸ் டாயை காட்டப் போlங்களா இல்லே... டால்ஸ் : நான்தாம்பா டால்ஸ்டாய்... மாண : நீங்கதான் டால்ஸ்டாயா! (மண்டியிட்டு) டால்ஸ் டாய் என்னை மன்னிச்சிடுங்க. நீ.ன்னு பேசிட்டேன், என்னை மன்னிச்சிடுங்க. மடத்தனம் பண்ணிட்டேன். என்னை மன்னிச்சிடுங்க. டால்ஸ் : செர்ட்கோவ். இவனுக்கு டால்ஸ்டாயை நீன்னு பேசினதுலேதான் வருத்தம்; செருப்பு தைக்கிற தொழிலாளியை அப்படிப் பேசிட்டோமேன்னு வருத்தப்படலெ. கஷ்டமான தொழிலைக் கேவலமா நினைச்சு கடைசியிலே அந்தத் தொழில் செய்றவங் களையும் கேவலமா நினைக்கிறோம். மாண (மண்டியிட்டபடி) டால்ஸ்டாய். குருவே... என் பிதாவே என்னை மன்னிச்சிடுங்க, மன்னிச்சிடுங்க, மன்னிச்சிடுங்க. அறியாமையால் செய்த குற்றத்தை அடியோடு மறந்துடுங்க. டால்ஸ் ; நீ முதல்ல மண்டி போடறத விட்டுட்டு மனித னாய் நில்லு. மாண : நான், நீன்னு பேசிட்டேன். உங்களை இழிவு படுத்தின என்னை மன்னிச்சிடுங்க... பிரபு மன்னிச் சிடுங்க.