பக்கம்:லியோ டால்ஸ்டாய்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 + லியோ டால்ஸ்டாய் டால்ஸ் ; நீ எழப்பா மொதல்லே. மாண : ஜார் மன்னரையே தூசியாய் நினைக்கும் என் டால்ஸ்டாயை இழிவா பேசிட்டேன். என்னை மன்னிக்க மாட்டீங்களா? டால்ஸ் ; நீ எழுந்திருப்பா, மண்டி போடறத விட மாட்டியா? மாண : நீங்க தெய்வம், யேசுவின் மறு அவதாரம்! புத்தரின் வாரிசு. உங்கள் முன்னாலே மண்டி போட்டு பிராயச்சித்தம் தேடறதுலே தப்பில்லெ. பிரபுவே... குருவே. சிந்தனைச் செம்மலே. நீங்கள் தெய்வம். டால்ஸ் : (மண்டியிட்டு) நான் தெய்வமில்லே. மனிதன். சாதாரண மனிதன். நான் உன்போல பல இளைஞர் களுக்கு தெய்வம்னு ஒரு நினைப்பை ஏற்படுத்தி பாவம் பண்ணிட்டேன். நீயும் என்னை மன்னிச்சிடு. மன்னிச்சேன்னு ஒரு வார்த்தை சொல்லு. ஒரே ஒரு வார்த்தை. மாண : நீங்கள் மண்டியிடலாமா... இந்த அற்பனிடம் மன்னிப்பு கேட்கலாமா... எழுந்திருங்க பிரபு. டால்ஸ் ; நீ மண்டி போட்டிருக்கிறவரைக்கும் இந்த அற்ப மனிதன் மண்டியிடறதுல தப்பில்லெ தம்பி... தப்பில்லெ. செர்ட் : இந்தாப்பா, உன்னை மாதிரி அவரும் மண்டியிட முடியுமா?... உடம்பு தாங்குமா?. நீ வேலைக்குப்