பக்கம்:லியோ டால்ஸ்டாய்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 11 திருப்தி கொடுக்கிறது அவன் படைப்புகளைப் படிச்சிட்டு சொல்லும்போதுதான். ஒரு எழுத்தாளன் பெயர் நிலைத்து நிக்கணும்னா அவன் அந்த படைப்புகளில் தெரியணுமே தவிர அவனுள் அந்தப் படைப்புகள் தெரியக்கூடாது. பாத்திரங்கள் முன் னாலயம் படைப்பாளி பின்னாலும் இருக்கணும். எழுத்தாளன் ஒரு ஆல் விதை. அவன் படைப்புகள் ஆலமரம். விதை பெரிசானா நோயின்னு அர்த்தம்... மரம் முளைக்காது. நிழல் கிடைக்காது. புரியுதா? தயவுசெய்து இனிமேல் எந்த எழுத்தாளன் கிட்டேயும் அவன் படைப்புகளைப் படிக்காமல் பேசாதே! மாண : என்னை மன்னிச்சிடுங்க. டால்ஸ் : வருத்தப்படாதே தம்பி, என் நாவல்களையே கறைச்சிக் குடிச்சிட்டு என் முன்னாலேயே தப்பர்த்தம் கொடுக்கறாங்க... அவர்களைவிட நீ எவ்வளவோ மேல். செர்ட் ; நீ இப்பொ போயிட்டு இன்னொரு தடவை வா. அய்யா உணர்ச்சிவசப்படறாரு. (திக்பிரமையுடன் மாணவன் வெளியேறுகிறான்) என்ன இது. பெரிய பெரிய அறிவாளிகள் உங் களைப் பற்றி எழுதின விமர்சனங்களை உதா சினப்படுத்தின நீங்களா இந்தப் பையன் படிக்கலேன்னு உணர்ச்சிவசப்படlங்க? டால்ஸ் : செர்ட்கோவ் அறிவாளிகள் எழுத்தாளனை தாங்கள் அறிவாளின்னு காட்டிக்கிறதுக்காக