பக்கம்:லியோ டால்ஸ்டாய்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 + லியோ டால்ஸ்டாய் விமர்சிக்கிறாங்க- எல்லாருமில்லே... (பலர்) இவங்க அரிப்புக்கு இலக்கியமும் எழுத்தாளனும் சொறி யறதுக்கு கம்புகள். ஷேக்ஸ்பியரைப் பாராட்ற இந்த அறிஞர்கள், ஷேக்ஸ்பியர் எந்த சமூகப் பிரக்ஞையை உண்டுபண்ணினார்னு நினைத்துப் பார்க்கிறார்களா? கலை கலைக்கேன்னு சொல்றாங்களே தவிர எதை கலைக்கச் சொல்றாங்களோ தெரியலே. ஆனா வந்துபோன பையன் எவ்வளவோ மேல். அவன் பொய்யிலையும் ஒரு விசுவாசம் இருக்கு. அவனோட அசத்தியத்திலையும் ஒரு சத்தியம் இருக்கு. அதனாலதான் உணர்ச்சி வசப்பட்டுட்டேன். (சோன்யா வரும் காலோசை கேட்கிறது) செர்ட் : (அவசரமாக) உங்க மனைவி சோன்யா வராங்க. அய்யா அந்த மேன் ஆண்ட் மாஸ்டரை (Man and Master) எழுதி முடிச்சுட்டீங்களா? இன்டர்மீடியறி (intermediary) பத்திரிகைக்கு அனுப்பணும். சோன்யா : (வந்ததும்) செர்ட்கோவ் வயசான ஒருத்தர் கிட்ட எவ்வளவு நேரம் பேசறதுன்னு கணக்கில் லையா? அவரு பழையபடியும் நோயில படுத்தால் நாமுமில்லா அவஸ்தைப்படனும்? செர்ட் : அவருக்கு என்ன தேவை எப்போ தேவைன்னு எனக்குத் தெரியும். சோன்யா . இவரோட வாழ்ந்து பதிமூணு பிள்ளைகளை யும் மூணு அபார்ஷனையும் பார்த்த என்னைவிட