பக்கம்:லியோ டால்ஸ்டாய்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 13 உங்களுக்கு நல்லா தெரியுமோ? இவர் என் கணவர். என் உயிர்! செர்ட் ; அதை மறந்துட்டீங்க! சிப்பிக்குள்ளே முத்து இருக்கிறதுனாலே முத்து, சிப்பிக்கு சொந்தமா யிடாது. சோன்யா : ஒஹோ- அந்த அளவுக்கு வந்தாச்சா? குட்டிச் சாத்தான் புகுந்த வீடு உருப்பட்டாலும் உருப்படும். ஆனா நீங்க புகுந்த வீடு உருப்படவே உருப்படாது. என் கணவனுக்கும் எனக்கும் இடையே கலகம் உண்டாக்கிற நீங்க நல்லா இருக்கமாட்டீங்க! செர்ட் : என் குருவையும் என்னையும் பிரிச்சு வைக்கிற நீங்களும். டால்ஸ் : செர்ட்கோவ். நீ போயிட்டு அப்புறம் வாரியா... சோன்யா : அப்புறம் எதுக்கு? அடுத்தவாரம் வரட்டும். (செர்ட்கோவ் போகிறார் -டால்ஸ்டாய் செருப்பை எடுத்துத் தைக்கிறார்) சோன்யா : செர்ட்கோவ்கிட்ட பேசணும்- என்னைப் பார்த்தா செருப்பை எடுக்கனுமோ? நான் செருப்பை விடக் கேவலமா போயிட்டேன்- அப்படித்தானே... டால்ஸ் : சோன்யா, அவன் எனக்காக ஜார் அரசாங்கத் தால் நாடு கடத்தப்பட்டவன்... நான் சொல்றபடி வாழ்றவன்! சோன்யா : அப்புறம்?