பக்கம்:லியோ டால்ஸ்டாய்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 + லியோ டால்ஸ்டாய் நடக்கிற என் தந்தையை மன்னிச்சிடலாம். ஆனா உலகமெல்லாம் தன் வீடுன்னு சொல்லிக்கிட்டு இப்போ ஒரு வீட்டையே உலகமா நினைச்சு மனைவிக்குப் பயப்படுற டால்ஸ்டாயை என்னாலே மன்னிக்க முடியலே. 1881-க்குப் பிறகு நான் எழுதுகிற எதையும் யார் வேண்டுமானாலும் வெளியிடலாம்னு பகிரங்கமா அறிவிச்சிட்டு இப்போ மனைவிக்கு இரகசியமா கதை கொடுக்கிற ஒரு முரண்பாடான டால்ஸ்டாயை நான் மகள் என்கிற முறையில் பார்த்தாலும் என்னால மன்னிக்க முடியல. நல்லா நினைச்சுப் பாருங்க அப்பா... உங்களுக்காக எத்தனையோ பேர் நாடு கடத்தப்பட்டிருக்காங்க. உங்களை ஞானத் தந்தையாக நினைத்து உலகத்தின் மூலை முடுக்கில் இருந்து வந்துக்கிட் டிருக்காங்க... எதுக்காக? டால்ஸ்டாய் என்கிற பிரபுவைப் பார்க்கவா? இல்லை சொத்தை துன்பமாக நினைத்து- எழுதியபடி வாழ நினைக்கிற ஒரு யோகியைப் பார்க்கத்தான் வர்றாங்க; ஒரு மனிதனைப் பார்க்க வர்றாங்க... நீங்க அதுக்குள்ள தகுதியை இழந்துட்டீங்க அப்பா! டால்ஸ் : அவளிடமிருந்து நான் தப்பவேண்டும். எனக்கு வேண்டியது நிம்மதி. இந்த நன்மைக்காக ஒரு தீமை யை விலையாகக் கொடுத்துட்டேன். தீமையை எதிர்க்க லாகாது என்ற என் எண்ணப்படி அந்தத் தீயவளுக்கு. ஆண்டவனே... என் வாயில் ஏன் தீய வார்த்தையை வரவிடுறே. சோன்யா தீயவள் அல்ல. என் மனைவி. - எனக்காக உயிரையும் விடத் தயாராக இருப்பவள்.