பக்கம்:லியோ டால்ஸ்டாய்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் + 19 அலெக்ஸ் : அதோடு உயிரை எடுக்கவும் தயாராய் இருப்பவள். (பண்ணையாள் ஒருவன் அழுதுகொண்டே வந்து டால்ஸ்டாயின் கால்களைக் கட்டிக் கொள்கிறான்) ப.ஆள் : பிரபு! என்னை நீங்கதான் காப்பாத்தணும். எங்களில் ஒருவராக வாழும் எங்கள் பிரபுவே. இந்தக் கொடுமையை நீங்கதான் போக்கணும்! டால்ஸ் : இந்தா பாரு... என்னை நீ பிரபுன்னு சொல்ற வரைக்கும் உன்னோடு பேசப் போறதில்லே. டால்ஸ்டாயின்னு பேர் சொல்லிப் பேசு... எது பேசினாலும் கேட்கிறேன்! ப.ஆள் : டால்ஸ்டாய்! என் மகன்... உங்கள் பண்ணை யாள் ஏதோ ஒரு மரத்தை வெட்டினான்னு உங்க மனைவி வேலைக்கு அமர்த்தியிருக்கும் அரசாங்க போலீஸ் அவனை அடி அடின்னு அடிக்கிறான். என் மகன் அரை மயக்கமாய் கிடக்கிறான். இப்போ அவனை போலீஸ் ஸ்டேஷனுக்கு இழுத்துக்கிட்டு போகப் போகிறேன்னு இடுப்பிலே மிதிச்சான்... என் மகளை தரதரன்னு இழுத்துக்கிட்டுப் போறான். டால்ஸ்டாய் நீங்கதான் காப்பாத்தணும். அலெக்ஸ் : பாத்தீங்களா உங்களுக்காக உயிரைவிடத் தயாராக இருக்கும் உங்க மனைவியோட வேலைய. சரியான ராட்சஸி!