பக்கம்:லியோ டால்ஸ்டாய்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 + லியோ டால்ஸ்டாய் படைக்கிற சொத்து இந்தக் குடும்பச் சொத்து. இதைப் பிரத்தியாருக்குக் கொடுக்க உங்களுக்கு உரிமை இல்லை. உங்க டயரியை அந்தத் திருட்டு செர்ட்கோவ் மூலம் இன்டர்மீடியறி பத்திரிகைக்குக் கொடுத்திங்கன்னா அந்த டைரியை வச்சு அவன் பணம் பண்றதை என்னாலே பார்த்துக்கிட்டு இருக்க முடியாது. எனக்கு இப்பவே அந்த டைரி வேணும். எனக்குப் பணம் தேவையாய் இருக்கு. டால்ஸ் : நான் பண்ணையாளை ஏன் அடிச்சேன்னு கேட்டா, நீ பணம் பண்றதுக்கு வழி சொல்றே சோன்யா... இதுக்கு மேலே என்னாலே தாங்க முடியாது. நீ. தயவுசெய்து வெளியே போயிடு. வெளியே போடீ. சோன்யா : (அழுதுகொண்டே) போரும் சமாதானமும் எழுதத் தூண்டின. இந்த மனைவியையா வெளியே போகச் சொன்னிங்க? ஒரு வருஷமா எழுதுன உங்களை முட்டையை அடைகாப்பது மாதிரி அடைகாத்த என்னையா வெளியே போகச் சொல்றீங்க? பஞ்சத்தைப் பற்றி எழுதி அரசாங்கத் திடம் எக்கச்சக்கமா மாட்டிக்கிட்ட போது, ஜார் மன்னரிடம் போய் முறையிட்டு உங்களைக் காப்பாற்றிய நானா வெளியே போகணும்? பதிமூணு பிள்ளை பெற்ற என்னையா வெளியே போகச் சொல்றீங்க? என் அன்புக்கு இதுதான் நீங்க தரும் ஊதியமா? கடவுளே! பகவானே இந்தக் கொடு