பக்கம்:லியோ டால்ஸ்டாய்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 23 மையை என்னாலெ தாங்க முடியலையே... தாங்க முடியலையே... டால்ஸ் : சோன்யா - நம்ம கோர்டீய் (Gordie) உனக்குத் தெரியுமா?. உனக்குத் தெரிஞ்சிருக்க முடியாது. ஏன்னா அவன் குடியானவன். ஒருநாள்... என் மனைவி செத்துப் போனாள்னு சொல்லி அழுதான்; இளம் பெண்ணான்னு கேட்டேன்... எனக்கும் மூத்தவள்னு சொன்னான்; காதல் திருமணமான்னு கேட்டேன். கட்டாயத் திருமணம்னு சொன்னான்; நல்லா பணிவிடை செய்றவளான்னு கேட்டேன்... இல்லை, பத்து வருஷமா படுக்கையிலே கிடந்தாள் னான். பிறகு ஏன் அவள் இறந்ததுக்கு வருத்தப் படறேன்னு கேட்டேன். நான் வீட்டுக்கு வந்ததும் என்னை அன்போடு பார்த்து, சாப்பிடு கோர்டீய்’ என்று கேட்பாளே... அதுமாதிரி இனி யார் கேட்கப் போகிறான்னு அழுதான். புரியுதா சோன்யா... நீ எனக்கு எவ்வளவோ உதவி செய்திருக்கே, இல்லேன்னு சொல்லலே, இருந்தாலும் ஒண்னுக்கும் பிரயோஜனமில்லாமே போன கோர்டீய் மனைவியோட அன்பு முன்னாலே உன் அன்பு வெறும் தூசி! அன்பு செயல்லே இருக்கிறது. வரவேண்டியதெல்லாம் மனசிலயிருந்து வரணும். சோன்யா : ஒஹோ. ஒரு குடியானவன் மனைவியைவிட நான் கேவலமா போயிட்டேனா? அய்யோ... என் புருஷன் இருக்கிற சொத்தையெல்லாம் ஊராருக்குக் கொடுத்துட்டு என்னை அம்போன்னு நிக்கவச்சது மட்டுமில்லாமே... என்னை அன்பில்லாதவள்னு