பக்கம்:லியோ டால்ஸ்டாய்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 லியோ டால்ஸ்டாய் சொல்லிட்டாரே... பரம பிதாவே... என்னாலே இந்தக் கொடுமையை தாங்க முடியாது. என்னை கூட்டிக் கிட்டுப் போங்க... கூட்டிக்கிட்டுப் போங்க... அலெக்ஸ் : (வந்துகொண்டே) நீ அவ்வளவு சீக்கிரமா போகக் கூடாதம்மா... நீ குடியானவர்களை செய்திருக்கிற கொடுமைக்கு அவங்க கையாலையே நீ சாகணும். டால்ஸ் : அலெக்ஸாண்ட்ரியா... அவள் உன் அம்மா! அலெக்ஸ் : இவளா என் அம்மா... ச்சீ. ராட்சஸி. பேயைவிட இரக்கமில்லாத மனிதப் பேய்! டால்ஸ் : அலெக்ஸாண்ட்ரியா. அவள் என் மனைவி. (ஆத்திரத்தை அடக்கிக்கொண்டு) ம்... அப்புறம் அந்தக் குடியானவனைக் காப்பாற்றினாயா? அலெக்ஸ் : அந்தக் கொடுமையை ஏன் கேக்கறீங்க... ஒன்றும் அறியாத அப்பாவியை அந்த முரட்டுப் பிசாசு தரதரன்னு இழுத்துக்கிட்டுப் போனான், நான் அவனை வழிமறித்துக் கண்டபடி திட்டிட்டேன். அவன் என்னடான்னா, ஒரு அரசாங்க அதிகாரியை சட்ட ரீதியான கடமையில இருந்து தடுத்த குற்றத்துக்காக என் மேலெ கேஸ் போடப் போறானாம். நாளைக்கோ மறுநாளைக்கோ கோர்ட்டிலே ஆஜராகணுமாம். எல்லாம் இந்த மகாப் பெரிய அம்மாவாலே... சோன்யா : நீ எதுக்குடி அங்கெ போனே? மரத்தை வெட்டின குடியானவப் பயலை... அவன் இழுத்துக்