பக்கம்:லியோ டால்ஸ்டாய்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 25 கிட்டுப் போனா உனக்கென்னடி வந்தது. உனக்கு இதுவும் வேணும். இதுக்கு மேலேயும் வேணும். டால்ஸ் : சோன்யா... அவள் என் மகள். அலெக்ஸ் : இதப்பாரு... உன் பேச்செல்லாம் அப்பா கிட்டெ வச்சுக்கோ. எங்கிட்டே பேசினா மரியாதை இல்லாம போயிடும். சோன்யா ; லியோ... பாத்தீங்களா அவள் பேசறதை! இதையும் கேட்டுக்கிட்டிருக்கீங்களே, நீங்கதான் அரக்கனாச்சே. அலெக்ஸ் : அப்பாவ அப்படிப் பேசாதே! அப்புறம் எனக்குக் கெட்ட கோபம் வரும். சோன்யா : என்னடி செய்வே. என்னைவிட உனக்கு அவர் மேலே அதிக உரிமையோ?... அவரோட பதிமூணு பிள்ளை பெத்தவடீ நான். அலெக்ஸ் : இனிமே உன் புருஷன்கிட்டே அதாவது என் அப்பாகிட்டெ... சண்டை போடும்போது பதிமூணுன்னு சொல்லாதே... பன்னிரெண்டுன்னு சொல்லு ஏன்னா. இனிமே நான் உனக்குப் பிள்ளை இல்லே! டால்ஸ் : அலெக்ஸாண்ட்ரியா! அம்மாவுக்கு நீயும் மகள் தான், இப்படிப் பேசலாமா? அலெக்ஸ் : மன்னிச்சிடுங்க அப்பா.. பதிமூணு பிள்ளைங் கன்னு உரிமையோட பேசற இந்த அம்மா என்னை