பக்கம்:லியோ டால்ஸ்டாய்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 டி லியோ டால்ஸ்டாய் அவள் பிள்ளையா சேக்காட்டி, அவுங்க உங்களைப் பேசற பேச்சிலே பதிமூனிலெ ஒரு பங்கு குறைய லாம்னு நினைக்கிறேன். சோன்யா : நான் உன்னை சுமந்து பெத்தவடீ... அலெக்ஸ் : அந்தப் பாவத்தைத்தான் நான் சுமந்துகிட்டு இருக்கேனே... நீ வேறே சொல்லிக் காட்டணுமா? ஒரு குடியானவனை நீ அமர்த்தியிருக்கிற போலீஸ் காரன் உன் தூண்டுதலினாலேயே அடிச்சு நொறுக்கி யிருக்கிறான்; தடுக்கப் போன என் மேலே வழக்குப் போடப் போறானாம்! இவ்வளவையும் கேட்டுக்கிட்டு ரசிக்கிற மாதிரி இருக்கிற நீ பெண்ணே இல்லே... அப்புறம் எப்படி அம்மாவா ஆக முடியும்? அப்பா, இனிமேலே இந்த வீட்டிலே ஒரு வினாடிகூட இருக்க முடியாது. இந்த அம்மா என்னைப் பேசறதை என்னாலே சகிச்சுக்க முடியும். ஆனா உங்களைப் பேசறதைக் கேட்டுக்கிட்டு என்னாலே இருக்க முடியாது. நான் கொலைகாரியா மாற விரும்பலே. அதனால நானும் என் ஸ்நேகிதியும் என் பண்ணைக்குப் போறோம். நீங்க என்னை அங்கே வந்து பாருங்க. நான் வரட்டுமா அப்பா... சோன்யா ; போணுமின்னா போயேன். ஏண்டி மிரட்றே. அலெக்ஸ் : இனிமே 'டி' போட்டு பேசினா மரியாதை யைக் கெடுத்துக்குவே. ஏன்னா நான் உனக்கு மகள் இல்லே. (துக்கத்தை அடக்கிக்கொண்டு) நா.ன். வறேம்பா. (சற்று நடந்து திரும்பிப் பார்த்து) அப்பா, நீங்க எப்ப வேணும்னாலும் என் பண்ணைக்கு