பக்கம்:லியோ டால்ஸ்டாய்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 27 வரலாம். மேடம் சோன்யா, தயவுசெய்து என் அப்பாவை அதிகமாகக் கொடுமைப்படுத்தாதீங்க- இது உங்க நலத்துக்காக சொல்ற வார்த்தை. போலீஸ்காரனுக்கு சாட்சி சொல்ல வருவீங்களே அப்போ உங்களைக் கோர்ட்டிலே சந்திக்கலாம்னு நினைக்கிறேன். (டால்ஸ்டாயை நோக்கி விம்மிய குரலில்) தாயில்லாம போன இந்தப் பெண்ணு போயிட்டு வரேன் அப்பா. (அலெக்ஸாண்ட்ரியா போகிறான் - டால்ஸ்டாய் விரக்தியோடு சிரிக்கிறார்) சோன்யா : இது எல்லாத்துக்கும் காரணம் நீங்கதான். குழந்தையை வளர்க்கத் தெரியாம வளர்த்து குட்டிச் சுவராக்கிட்டீங்க! போறாளாம்- போனா போகட்டுமே! நீங்க எழுதினதெல்லாம் ஊராருக்குக் கொடுங்க. இப்போ நாம ரெண்டு பேரு சேர்ந்து எழுதினதும் ஊரார் பிள்ளையா போயிட்டுது... எல்லாம் உங்களால... (போகிறாள்) டால்ஸ் : (தனிமையில்) அலெக்ஸாண்ட்ரியா. போயிட்டி யாம்மா... நீயும் போயிட்டியாம்மா... நான் கண்ணுக் குள்ள கண்ணா வளர்த்த மூத்த மகன் ‘டான்யா' (Tanya) 32 வயசில கல்யாணம் பண்ணிக்கிட்டுப் போனான்; மனச்சாட்சியாய் இருந்த அருமை மகள் 'மர்யா (Marya) இறந்து போனாள்; மாஷா”வும் (Masha) அவளோட குடும்பத்துக்குள்ளே விழுந் திட்டாள். நான் பெற்ற மகன்களே. ஏன் பெற்றேங்கிற மாதிரி பேசறாங்க. என்னுடைய நிஜத்தைக் கண்ட