பக்கம்:லியோ டால்ஸ்டாய்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 லியோ டால்ஸ்டாய் இளைய மகன் ஏழு வயசிலேயே என்னை விட்டுட்டு இறந்துட்டான். உன் அம்மாவுக்கோ என்னைவிட அந்தப் பாடகன் ஒசத்தியாய் போயிட்டான். கடைசி பெண்ணான உன்னை மலைபோல நம்பியிருந் தேன். நீ மலையையே என் மேலே போட்டுட்டு போறியேம்மா... போ. நான் தனியாத்தான் நிக்கறேனே தவிர தனிமைப்படலம்மா, இந்தக் குடியானவர் களும்... மண்ணும் மலையும்... மரம் செடியும் இருக்கும்வரை நான் தவிக்கமாட்டேம்மா. தவிக்க மாட்டேன். (துக்கத்தை அடக்கிப் பெருமூச்சு விடுகிறார்)