பக்கம்:லியோ டால்ஸ்டாய்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி - 3 இடம் : தோட்டம் நேரம் : மாலை வேளை பாத்திரங்கள் : டால்ஸ்டாய் - மாக்ஸிம் கார்க்கி - சோன்யா. (டால்ஸ்டாய் உலவுகிறார்- கார்க்கி வருகிறார்) டால்ஸ் : (திரும்பிப் பார்த்து) கார்க்கியா! வா... வா... பார்த்து ரொம்ப நாளாச்சு, அடிக்கடி வரக்கூடாதா... வர முடியலையா... வர இஷ்டமில்லையா? கார்க்கி : ரெண்டும்தான் காரணம். நீங்க ஒரு சூரியன்... கண்ணில் பட்டதையெல்லாம் எரிக்கிறதோட தன்னையே எரிச்சிக்கிடற சூரியன். இந்த சூரியன் கிட்ட அகலாமலும் அணுகாமலும் இருக்க விரும்பறேன். (டால்ஸ்டாய் உற்றுப் பார்க்க) ஏன் என்னை அப்படி உற்றுப் பார்க்கறிங்க ! டால்ஸ் : (உற்றுப் பார்த்தபடி) கார்க்கி எனக்கு ஒரு சந்தேகம். நீ குழந்தையாகவே இருந்திருக்க மாட்டேன்னு நினைக்கிறேன். பிறக்கும்போதே பெரிய ஆளாவே பிறந்திருப்பியோ என்பது மாதிரி ஒரு பிரமை, உண்மையிலேயே நீ ஒரு அதிசயப் பிறவி,