பக்கம்:லியோ டால்ஸ்டாய்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 + லியோ டால்ஸ்டாய் என்னை மாதிரி மது அருந்தறதில்லே... அதுபோல இதர பழக்கங்களும் கிடையாது; நானாவது கெட்டுத் திருந்தினவன்... நீயோ கெடுதியையே திருத் துறவன். ஆனால் உன்னையும் என்னால புரிஞ்சிக்க முடியலே. கார்க்கி : தீமையை எதிர்க்கக்கூடாது என்று உபதேசம் செய்யும் உங்களால நான் எழுதறதைப் புரிஞ்சுக் கிட்டாலும் ஜீரணிக்க முடியாது. போகட்டும். நான் எழுதின லோவர் டெப்த் (Low Depth) அதல பாதாளம் படிச்சீங்களா? டால்ஸ் : படிச்சேன். பிரமாதம். ஆனால் ஒரு விஷயம் எனக்குப் பிடிக்கலே. கார்க்கி : என்னது? டால்ஸ் : கிராம மக்களை நீ சரியா புரிஞ்சுக்கலேன்னு நினைக்கிறேன். நீ எழுதியிருக்கிறது மாதிரி கிராம மக்கள் அப்பாவிகளும் இல்லை. எதையும் நேரடியாகவும் பேசமாட்டாங்க. நம் மக்கள் மகா புத்திசாலிகள்... அந்நியன் ஒருவனை, குறிப்பா படிச்சவனைப் பார்க்கும்போது அவங்க ஒண்னும் தெரியாத முட்டாள் மாதிரி பாவலா பண்ணுவாங்க... அப்பத்தானே ஆசாமி எல்லாத்தையும் கக்குவான். படிச்சவன் பேசுறதுக்கெல்லாம் தலையாட்டியாட்டி அவங்களே ஒரு முடிவுக்கு வருவாங்க. அநேகமாக அது படிச்சதா நினைக்கிறவங்களை பைத்தியமாக்கற முடிவா இருக்கும்.