பக்கம்:லியோ டால்ஸ்டாய்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 + லியோ டால்ஸ்டாய் மூணைவிட பெரிசா இருந்தால் நம்பரைப் பற்றிக் கவலைப்படாமல் இருக்கிறது மாதிரி... வயிற்றுக்கு சோறு கிடைச்சா இதர விஷயங்களைப் பற்றிக் கவலைப்படறதுல்லே. அதனால்தான் பணக்காரங்க அவங்களுக்கு சாப்பாடு போட்டே அவங்களைச் சாப்பிட்டு விட்டாங்க. இதைத் தெரியப்படுத்தணும். நாலு மூன்றைவிட சிறுசாயும் ஆயிடும் என்பதைச் சுட்டிக் காட்டணும். பெரும்பான்மையோரான ஏழைகள், சிறுபான்மை பிரபுத்துவாதிகளால் நசுக்கப்படுற, சாதாரண உண்மையை, அசாதாரண மாய் சொல்லி, சாமான்ய மக்களையும் மகத்தான வர்களாய் மாற்றணும். அதுதான் என் வேலை. இலக்கியம் தனிமனிதனின் புலம்பலல்ல. சமுதா யத்தின் பிரதிபிம்பம். அதோட சமுதாயத்தை வளரச் செய்யும் ஒரு பரிணாமக் கருவி. இல்லையா? டால்ஸ் : உண்மைதான் கார்க்கி. உன்கிட்ட நான் ரசித்தது. யதார்த்தம், முற்போக்கு. எழுத்து ஒரு சத்தியம், ஒரு வேதம். அதை உபயோகிக்கிறவன் உபாசிக்கிறபடி உபாசித்தால் அது நிச்சயம் பலிக்கும். இதை குடிகாரங்க என்னதான் எழுதினாலும், அவன் குடிவெறி மாதிரி மை காயும் முன்னயே எழுத்தும் காஞ்சுடும். இன்னொரு வகை... இவங்களுக்கு செக்ஸ் தவிர எதுவுமே தெரியாது. பொம்பளை பேர்லயும் எழுதுவான் பெண்டாட்டி பேர்லையும் எழுதுவான். அப்பாவி மனைவிகள். பேட்டிகூட கொடுக்கச் சொல்லுவாங்க. இவங்க கெளரவ விபசாரிகள்... காசுக்கு விபசாரம்