பக்கம்:லியோ டால்ஸ்டாய்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 33 பண்றவங்களை மன்னிச்சுடலாம். ஆனா இந்த கெளரவ விபசாரிகளை மன்னிக்க முடியாது. ஆனால் நீ அப்படியல்ல. ஒரு புதிய சமுதாயத்தைப் படைக்கத் துடிக்கிற பாட்டாளி ! உனக்கு இலக்கியம் ஒரு போர்வாள்- அந்தப்புரமல்ல. ஆனால் உன்னோட புரட்சியையும் உன் நாத்திக வாதத்தையும் கடவுள் நம்பிக்கை கொண்ட என்னால் புரிஞ்சுக்க முடியலே. கார்க்கி : நீங்க தப்பா நினைக்கலேன்னா உள்ளதை சொல்றேன் மாஸ்டர். நீங்கள் கடவுள்வாதியல்ல. நமக்கு மேலேயும் ஒரு கடவுளான்னு நினைக்கிற. அதே சமயம் ஆணவமில்லாத மனிதன். உங்கள் கொள்கைப்படி ஒரு சமுதாயம் அமைந்தால் அது ஆபத்தானது என்று நினைக்கிறவன் நான். அதே சமயம் இந்த நாட்டில் தோன்றப் போகிற புரட்சிக்கு லெனின் சொன்னதுபோல நீங்க அதைப் பிரதி பலிக்கும் கண்ணாடி. நம்நாட்டில் சமதர்ம சமுதாயம் மலரத்தான் போகிறது. பாட்டாளி மக்கள் ஆளத்தான் போகிறார்கள். இந்தப் புரட்சி இதர நாடுகளையும் உலுக்கத்தான் போகிறது. பிரபுக்கள் பிச்சைக்காரர் களாகவும் பிச்சைக்காரர்கள் பிரபுக்களாகவும் ஆகத்தான் போகிறார்கள். பல அழியும். சில பிறக்கும். அல்லது போய் நல்லது வரும். அந்தப் புரட்சிகரமான சமுதாயத்தில் செக்ஸை வியாபாரம் செய்யமுடியாத புரட்சிகரமான ரஷ்ய இலக்கியத்தில் இதே டால்ஸ்டாயின் பெயர் முதலாவதாகவும் முடிவாகவும் இருக்கும். இது சத்தியம்.