பக்கம்:லியோ டால்ஸ்டாய்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 + லியோ டால்ஸ்டாய் டால்ஸ் : கார்க்கி, இந்தக் கிழவனை நீ குழந்தையாய் ஆக்கிட்டே. கார்க்கி : நான் கடவுள் நம்பிக்கை இல்லாத நாஸ்திக வாதிதான், இல்லேன்னு சொல்லலே. ஆனாலும் வெட்கப்படாமல் சொல்றேன்... நீங்கள் கடவுள் மாதிரி. ஆமாம் கடவுள்மாதிரி. டால்ஸ் : கடவுள் நம்பிக்கை உள்ளவன் என்னைக் கடவுள் என்றான். அந்த போலி வார்த்தையைவிட, கடவுள் நம்பிக்கை இல்லாத நீ என்னை கடவுள் மாதிரின்னு சொல்றத பெருமையா கருதுகிறேன் கார்க்கி. ஓ.. நான் குழந்தையாகிக்கிட்டே போறேன். புகழ் மயக்கத்துலே புழுவா மாறுறேன்... போகட்டும், உன் எஜமானியம்மா எப்படி இருக்கிறாள்? கார்க்கி : மிஸ்ஸஸ் கார்நெட் (Mrs Cornet)தானே. அந்த ராட்சலி செய்ததைக் கேட்டால் பயந்துடுவீங்க. டால்ஸ் : சும்மா சொல்லு... நானும் ஒரு ராட்சஸியோட தான் வாழறேன். சொல்லு. எதுன்னா காதல் கீதல்... கார்க்கி : காதலாவது கீதலாவது. அவள் வீட்ல மூன்று சகோதரிகள் வாடகைக்கு இருக்கிறது உங்களுக்குத் தெரியும். அந்தப் பெண்களை இவள் படாதபாடு படுத்தறாள். ஒருநாள் அந்தக் குடிகாரி என்ன பண்ணா தெரியுமா? டால்ஸ் : சீக்கிரமாச் சொல்லு. கார்க்கி : தாயில்லாத அந்த மூன்று பெண்களையும் ஒருநாள் மத்தியானம் திட்டினாள். தோட்டத்துக்கு