பக்கம்:லியோ டால்ஸ்டாய்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 35 வெளியே துரத்தினாள். அவங்க வாசல் பக்கம் ஓடினார்கள். இவள் அவர்களை வெளியே விடாமல் வாசலை மறைச்சிக்கிட்டு ஆபாசமா திட்டினாள். அந்த அப்பாவிப் பெண்கள் என்ன செய்யறதுன்னு தோணாமல் பயத்தோட மலங்க மலங்கப் பார்த்தாங்க. தோட்ட வேலைக்காரனான என்னால் தாள முடியாமல் யஜமானிகிட்ட போனேன். அந்தப் பெண்களைப் போகவிடும்படி சொன்னேன். உடனே 'நீ அந்தப் பெண்களோட இரவிலே சந்தோஷமா இருக்கிறவன்னு சொல்லிட்டா. டால்ஸ் ; நீ அப்படி ஏதும் சந்தோஷமா இருந்தியா? கார்க்கி : போங்க மாஸ்டர் - என்னைப் பார்த்தால் அப்படியா தோணுது? டால்ஸ் : உன் முகம் காதல் முகமில்லே. இது புரட்சி முகம்... ம்... மேற்கொண்டு சொல்லு. நீ என்ன பண்ணுனே... கார்க்கி : எனக்கு அவள் அந்தப் பெண்களை அப்படி நடத்தினதைப் பார்த்துக்கிட்டு இருக்க முடியலே. எவ்வளவோ சொன்னேன் கேட்கலே. அவளுகளை விட நான் அழகானவன்னு சொல்லி கவுனைக் கழற்றினாள். டால்ஸ் : இதுதான் க்ளைமேக்ஸ். நீ என்ன மயங் கிட்டியா? கார்க்கி : எனக்கு எதுவும் ஒடலே!