பக்கம்:லியோ டால்ஸ்டாய்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 - லியோ டால்ஸ்டாய் டால்ஸ் : இந்தமாதிரி சமயத்துலே ஓடாதுதான். கார்க்கி : நான் அந்த அர்த்தத்தில் சொல்லலே. என் ஆத்திரத்தைக் கட்டுப்படுத்த முடியலே. அவளைப் பிடிச்சு இரண்டு சுத்து சுத்தினேன். மண்வெட்டியால் ரெண்டு போடு போட்டேன். ஒ.ன்னு கத்திக்கிட்டே ஓடினாள். உடனே என் உடமைகளை எடுத்துக் கொண்டு வெளியேறினேன். அவள் ஜன்னல் பக்க மாக வந்து... கார்க்கி நான் போலீஸ்லே சொல்ல மாட்டேன்... வந்துடு வந்துடுன்னு கெஞ்சினாள். நான் திரும்பிப் பார்க்காமல் போயிட்டேன். டால்ஸ் : இதுலேயிருந்து உனக்கு என்ன தெரியுது? கார்க்கி அவள் அரக்கி. குடிகாரி! டால்ஸ் : அவள் உன்னைக் காதலிக்கிறாள். வேறு யாரா வது உன் இடத்தில் இருந்திருந்தால் இன்னேரம் அந்த விதவைப் பெண் ஒரு பிள்ளை பெற்றிருப் பாள் ! கார்க்கி : போங்க மாஸ்டர். அவள்கிட்ட எனக்கு அந்த மாதிரி எண்ணமே கிடையாது. டால்ஸ் ; நீ அதிசயப் பிறவி. ஆனாலும் நல்லவன். காதல் செய்யத் தெரியாத அசடு. ஆனாலும் புத்தி சாலி. கார்க்கி : அலெக்ஸாண்ட்ரியா எங்கே? டால்ஸ் : எதையும் தாங்கும் என் செல்லக்கிளி என் வீட்டுக்காரியின் பேச்சைத் தாங்கமுடியாம என்னை