பக்கம்:லியோ டால்ஸ்டாய்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 + லியோ டால்ஸ்டாய் கண்காணிக்க இரகசிய போலீஸ் போட்டிருக்கு. அது பத்தாதுன்னு நீயும் என்னை வேவு பார்க்க ஆரம்பிச் சுட்டே. சோன்யா, இந்த வேவு பார்க்கற வேலையை விட்டுடு. நானும் மனுஷன்தான். அதோட உன் கணவன். மகளைத்தான் துரத்திட்டே, என்னையும் துரத்திடாதே! சோன்யா : நானா துரத்தினேன்... இல்லே நீங்கதான் என்னைத் துரத்தlங்க. அடகடவுளே... ஆகாத காலத்துலெ கால் பட்டா குற்றம் கை பட்டா குற்றம்ங் கிறது சரியாதான் இருக்கு. ஏதோ வயசான மனுஷன், பனியிலெ நனைஞ்சா உடம்புக்கு ஆகாதேன்னு பார்க்க வந்தேன். டால்ஸ் : அதோட பாங்கில் இருக்கிற என் டயரியையும் கேட்க வந்தே! சோன்யா : அப்படியே வந்தாலும் அதில் என்ன தப்பு? அந்த டயரியிலே என்னைப்பற்றி என்னவெல்லாம் எழுதி இருக்கீங்களோ... யார் கண்டது? அது எனக்கு இப்போ வேணும். என்னைப்பற்றி எழுதியிருக்கிறதை என்னால் அனுமதிக்க முடியாது. டால்ஸ் : டயரியிலே என்ன எழுதி இருக்கு என்பதைவிட, அதை எப்படிப் பணம் பண்றது என்கிறததான் உன் பிரச்சினை. பணம் உழைப்புக்குப் பிரதியாக இல்லாமல் உழைக்கும் வர்க்கத்தை சுரண்டு வோருக்கு பிரதியாய் இருக்கு. சோன்யா : சுற்றி வளைச்சுப் பேசாதீங்க... அந்த டயரியை கொடுக்க முடியுமா முடியாதா?