பக்கம்:லியோ டால்ஸ்டாய்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 39 டால்ஸ் : முடியாது முடியாது... முடியவே முடியாது. சோன்யா : முடியாதா... அடகடவுளே... என் புருஷன் எனக்கில்லாம போயிட்டாரே! உயிரோட செத்துப் போயிட்டாரே! இருந்தும் பிரயோஜனமில்லாம இறந்தும் பிரயோஜனமில்லாம போயிட்டாரே. நான் இனிமே உயிரோட இருக்கப் போறதில்லெ... ஆற்றிலே விழுந்து சாகப் போறேன்! தூக்குப் போட்டு சாகப் போறேன்! விஷத்தைக் குடிச்சு சாகப் போறேன்! டால்ஸ் : இந்த மூன்றையும் நீ ஒரே சமயத்தில் செய். அப்பகூட நீ சாகமாட்டே! (சோன்யா, கோபமாக வெளியேறுகிறாள். டால்ஸ்டாய் வெறுமையாகச் சிரிக்கிறார்)