பக்கம்:லியோ டால்ஸ்டாய்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி - 4 இடம் : டால்ஸ்டாய் அறை. நேரம் : மாலைப் பொழுது. பாத்திரங்கள் : டால்ஸ்டாய் - செர்ட்கோவ்- அலெக் ஸாண்ட்ரியா - சோன்யா. (செர்ட்கோவ் அமர்ந்திருக்க, டால்ஸ்டாய் வருகிறார்) செர்ட் ; உடம்பு எப்படி இருக்கு? டால்ஸ் : பரவாயில்லே. நானும் பார்த்துக்கிட்டுதான் வரேன். எப்பவாவது எனக்கு வணக்கம் போடறியா? ஒருவேளை நான் போட்டபிறகுதான் போடறதுன்னு நினைக்கிறியா? செர்ட் : இவ்வளவு நாளாய் வணக்கம் போடணுங்கறதே எனக்குத் தோணலே... மன்னிச்சுடுங்க. டால்ஸ் , தமாஷக்கு சொன்னேன். என்றைக்கு இரண்டு நண்பர்கள் ஒருவருக்கொருவர் வணக்கம் போடறத நிறுத்தறாங்களோ அப்போதான் அவுங்க நெருக்க மான நண்பர்களாக முடியும். நட்பு... ஆண் பெண் காதல் மாதிரி. நல்ல காதல் சதையைச் சுற்றி அமையாது.